Pages

Tuesday, December 10, 2013

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் எதிர்வரும் மாரச் மாதம் ஜெனீவாவில் இடம்பெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளன: கருணாதிலக்க அமுனுகம!

Tuesday 10 December 2013
இலங்கை::கற்றுக் கொண்ட பாடங்கள் மட்டும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் முன்னேற்றம் குறித்தான அறிக்கையானது எதிர்வரும் மாரச் மாதம் ஜெனீவாவில் இடம்பெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளன என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்தார்.
 
யுத்தத்துக்கு பின்னரான காலப்பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் நிர்மாணப்பணிகள் குறித்து பல நாடுகளின் தலைவர்களாலும் வரவேற்வக்கப்பட்டதுடன் அவர்கள் அனைவரும் ஒரேமாதிரியான கருத்தையே கொண்டுள்ளார்கள்.பல்லிண சமூகமாக வாழும் இந்நாட்டில் மக்கள் அனைவரும் ஐக்கியத்துடன் வாழ்வதை அவர்கள் அறிந்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் நாட்டினால் அடையப்பெற்றுள்ள தேசிய நல்லிணக்கத்தின் அடைவுமட்டத்தை எவரும் இங்குவந்து பார்வையிடலாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் திறந்த அழைப்பை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 
யசூசி அகாஷி, ஜப்பானின் இலங்கைக்கான விசேட சமாதான பிரதிநிதியாக திகழ்வதுடன் நாட்டினால் அடையப்பெற்றுள்ள தேசிய நல்லிணக்கத்தின் அடைவுமட்டத்தை அவர் சுய மதிப்பீடு செய்யவுள்ளார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
 
எதிர்வரும் ஜெனீவா கூட்டத் தொடரில் அவரால் சாதகமான கருத்துக்கள் வெளியிடப்டுமாயின் அது கடந்த காலங்களில் இலங்கையில் மேற்கொள்ளப்ட்ட நல்லிணக்க செயற்பாட்டை காண்பிக்கக்கூடியதாகவிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
 

No comments:

Post a Comment