Saturday, December 07, 2013
இலங்கை::ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அகாஷி ஆறுநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை இலங்கை வரவுள்ளார்.
இம்மாதம் 13ஆம் திகதி வரை அவர் நாட்டில் தங்கியிருப்பார் என இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின்போது அகாஸி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
நல்லிணக்க முயற்சியின் ஒரு கட்டமாக நடத்தப்பட்டுள்ள வட மாகாண சபைக்கான தேர்தலை ஜப்பான் அரசாங்கம் வரவேற்றுள்ள நிலையில், யசூசி அகாஸியின் சமாதான விஜயம் அமைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாண சபைக்குத் தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கும் சூழ்நிலையில் இலங்கை வரும் அகாசி அரசாங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு தேசிய நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் கூறுவார் என ஜப்பானியத் தூதரகம் தெரிவித்தது.
இலங்கையின் சமாதானம், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புக்கான ஜப்பானின் விசேட பிரதிநிதியாக யசூசி அகாசி நியமிக்கப்பட்ட பின்னர் 22 தடவைகள் இலங்கைக்கு விஜயம் மேற் கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத் தக்கது.
ஜப்பானின் விசேட சமாதானத் தூதுவராக 2002 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டதை அடுத்து, யசூசி அகாஷியின் 23ஆவது இலங்கைக்கான விஜயமாக இது அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment