Pages

Tuesday, December 10, 2013

திருகோணமலை நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்ப்பு போராட்டம் மீது தாக்குதல்: ஒருவர் காயம்!

Tuesday 10 December 2013
இலங்கை::காணாமல் போனவர்களை கண்டறியும் குழுவினரால் திருகோணமலை நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்ப்பு போராட்டத்தின்போது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
 
இந்த கவனயீர்ப்பு போராட்டம் திருகோணமலை மத்திய பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் நடத்தப்பட்டதாக எமது பிரதேச செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
 
காணாமல்போன தமது உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தி இந்த கனவயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.
 
இதன்போது திடீரென அந்த இடத்திற்கு வந்த குழுவினர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
தாக்குதலில் காயமடைந்த ஒருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
இந்த சம்பவத்தினால் திருகோணமலை நகரில் பதற்றம் நிலவியதாகவும், பின்னர் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு கூறுகின்றது.
 
தாக்குதல் சம்பவம் தொடர்பில் திருகோணமலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
 

No comments:

Post a Comment