Pages

Tuesday, December 10, 2013

திவிநெகும தேசியவேலைத்திட்ட விழிப்புனர்வு!

Tuesday 10 December 2013
இலங்கை::பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற திவிநெகும தேசியவேலைத்திட்டத்தின் பிரதேச மற்றும் கிராம மட்டத்தில் பணியாற்றுகின்ற அரசஉத்தியோகத்தர்களுக்கான விழிப்புனர்வு செயலமர்வு நேற்று அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் நடைபெற்றது.

மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஜனாப்.எஸ். அன்வர்தீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. சாந்த பண்டார, மேலதிக அரசாங்க அதிபர் திரு.கே.விமலநாதன், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் ஜனாப்.எம்.ஐ.வஹாப்தீன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு.விவேகானந்தராஜா மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் உயர் அதிகாரிகள் பலர் வருகை தந்தனா்.

அம்பாறை மாவட்டத்தின் உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், விவசாய உதவிப் பணிப்பாளர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உதவியாளர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், மீன்பிடிப் பரிசோதகர்கள், தெங்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச மிருகவைத்தியர்கள் ஆகியோர் இந்த செயலமர்வில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment