Wednesday, December 11, 2013

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பிரிக்க முடியாத பந்தம் உள்ளதது: வை.கே. சின்ஹா!

Wednesday, December 11, 2013
இலங்கை::இந்தியாவும் இலங்கையும் பெளத்த மதம் தொடர்பில் பொதுவான கொள்கையொன்றை பகிர்ந்து வருவதன் மூலம் அவை எவராலும் முறிக்கமுடியாத வரலாற்று ரீதியான பந்தப் பிணைப்பினைக் கொண்டு விளங்குவதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
 
தலதா மாளிகையில் இந்திய கலரியொன்றை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹா.
இந்திய துணைக் கண்டத்தினதும் இந்தியாவினதும் தவப் புதல்வனாம் புத்த பகவான் எமது இரு நாடுகளையும் பின்னிப்பிணைய வைத்துள்ளார். எமது சமய , இனம் சார்ந்த மற்றும் மொழிசார்ந்த தொடர்புகள் உலகின் எப்பாகத்திலும் இல்லாதவாறு ஒத்த தன்மையைக் கொண்டுள்ளன.
இலங்கைக்கு பெளத்த மதத்தைக் கொண்டு வந்திருந்த மஹிந்த தேரர் பீஹார் மாநிலத்தில் உள்ள பட்னாவில் பிறந்தவர். இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையேயான தொடர்புகள் மஹிந்த தேரரின் ஜென்மபூமி மற்றும் கர்மபூமி இலங்கை ஆகியவற்றால் மேலும் வலுவடைத்துள்ளதெனவும் குறிப்பிட்டார்.
 
 

No comments:

Post a Comment