Wednesday, December 11, 2013

இலங்கை கடற்படை சிறைபிடித்த 250 மீனவர்கள் விடுவிப்பு!

Wednesday, December 11, 2013
வேதாரண்யம்::வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரையில் தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, காரைக்கால், தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மீனவர்கள் தங்கி மீன்பிடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று நாகை கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, சாமந்தான்பேட்டை, நம்பியார்நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் 36 படகுகளில் மீன்பிடிக்க சென்றனர்.

கோடியக்கரை அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் அவர்களை சிறைபிடித்தனர். 36 படகுகளிலும் இருந்த 250க்கும் மேற்பட்ட மீனவர்கள்  இலங்கை கடற்படையினர் யாழ்பாணம் கொண்டு சென்றதாக கூறப்பட்டது.

இந்த தகவல் கிடைத்ததும் நாகை மீனவ கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். மக்களவையிலும் இது எதிரொலித்தது.

இந்நிலையில், விசாரணைக்குப் பிறகு மீனவர்கள் 250 பேரையும் இலங்கை கடற்படை விடுவித்தது. அவர்கள் நாளை வந்து சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
tamil matrimony_INNER_468x60.gif
 

No comments:

Post a Comment