Thursday, December 12, 2013
சென்னை::தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், தே.மு.தி.க., இடம் பெறுவதற்கு அச்சாரமாக,
இன்று நடக்க உள்ள, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் இரண்டாவது மகன், சண்முக
பாண்டியன், கதாநாயகனாக அறிமுகமாகும், "சகாப்தம்' படத் துவக்க விழாவில், தி.மு.க.,
தலைவர் கருணாநிதி பங்கேற்க வேண்டும்' என, தே.மு
.தி.க., தரப்பில் இருந்து அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தே.மு.தி.க., செயற்குழு கூட்டமும், இன்று
மாலை, விஜயகாந்த் தலைமையில் அவசரமாகக் கூடுகிறது.
ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கு முன், தன் தலைமையில் தான் கூட்டணி அமைக்க
வேண்டும் என, விஜயகாந்த் விருப்பம் தெரிவித்தார். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான
பிறகு, பலமான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, லோக்சபா தேர்தலை சந்தித்தால் தான், தன்
கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும் என, விஜயகாந்த் கருதுகிறார்.
ஏற்காடு
தேர்தல் பிரசாரத்தில், விஜயகாந்துக்கு ஆதரவாக, தி,மு.க., ராஜ்யசபா தலைவர் கனிமொழி
பேசியது; "விஜயகாந்த் வெள்ளை மனம் படைத்தவர்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி
அளித்த பேட்டி ஆகியவை, விஜயகாந்தை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும், தேசிய
அளவில், பா.ஜ., வுடன் தி.மு.க., கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதால், தி.மு.க.,வுடன்
நட்பு வைத்து, கூட்டணியில் இடம் பெற, தே.மு.தி.க., விரும்புகிறது. அதற்கு
அச்சாரமாகத் தான், இன்று சென்னையில், விஜயகாந்தின், இரண்டாவது மகன் சண்முக
பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும், "சகாப்தம்' படத் துவக்க விழாவில் கலந்து கொண்டு
சிறப்பிக்க வேண்டும் என, தி.மு.க., தலைமைக்கு, தே.மு.தி.க., சார்பில் அழைப்பிதழ்
அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், தி.மு.க.,வுடன் கூட்டணியில் சேருவது
குறித்தும், கட்சியில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் வெளியேறியதால், அடுத்த
அவைத் தலைவராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்தும் விவாதிக்க, கட்சியின்
செயற்குழுக் கூட்டம் இன்று மாலை, 4:00 மணிக்கு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில்,
விஜயகாந்த் தலைமையி"ல் கூடுகிறது.

No comments:
Post a Comment