Monday, December 09, 2013
இலங்கை::நாட்டில் பயங்கரவாதத்திற்கு இனி இடமில்லை என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
புலிபயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப்
பரிந்துரைகளை அரசாங்கம் அமுல்படுத்தி வருகின்றது. இதனை தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது.
வாக்குகளை இழக்க நேரிடும் என்ற காரணத்தினால் இவ்வாறு ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது.
நாட்டு மக்களின் பௌதீக ஒருமைப்பாடு, தேசிய பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு
விடயங்களை கருத்திற் கொண்டு அரசாங்கம் வெளியுறவுக் கொள்கைகளை வகுத்து
வருவதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment