Thursday, December 12, 2013
இலங்கை::சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் சேவா வனிதா பிரிவினரால் ஏற்பாடு செய்யப்படிருந்த நிகழ்வொன்றில் வைத்து 28000 க்கும் அதிகமான மாணவர்களுக்கென 96 மில்லியன் ரூபா பெறுமதியான பாடசாலைப் புத்தகங்களும் கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்படன.
இந் நிகழ்வானது பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அயோமா ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று முன்தினம் (டிச.10) கொழும்பு பண்டாரநாயக ஞாபகார்த்த மண்டபத்தில் இடம் பெற்றது.
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் சேவா வனிதா பிரிவினரால் நான்காவது ஆண்டாக முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் இவ் ஆண்டில் சிவில் பாதுகாப்புத் திணைக்கள ஊழியர்களது பாடசாலை செல்லும் 28236 மாணவ மாணவியர், கல்விசார் புலமைப் பரிசில்கள் மற்றும் மடிக்கணணிகளுக்கு மேலதிகமாக புத்தகங்களை அன்பளிப்பாகப் பெற்றுக் கொண்டனர்.
கல்விசார் புலமைப் பரிசில்கள் பொதுப்பரீட்சைகளில் தமது திறமைகளை வெளிப்படுத்திய 98 மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. இதற்கமைய இவ் ஆண்டு ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு 15000 ரூபாய் பெருமதியான புலமைப் பரிசிலும் (க.பொ.த) சாதாரன தரப் பரீட்சையில் விசேட பெருபேற்றைப் பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கு 50000 ரூபா பெறுமதியான புலமைப் பரிசிலும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் (க.பொ.த) உயர் தரப் பரீட்சையில் விசேட சித்தி பெற்ற மாணவர்களுக்கென 37 புதிய மடிக்கணணிகள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வை நினைவு கூறுமுகமாக சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. குமுதுனி பீரிஸ், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. அயோமா ராஜபக்ஷவுக்கு நினைவுச் சின்னமொன்றையும் வழங்கிவைத்தார்.









No comments:
Post a Comment