Pages

Tuesday, December 17, 2013

50 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு !

Tuesday, December 17, 2013
இலங்கை::இந்திய மீனவர்கள் 50 பேரையும் தொடர் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜே.கஜநிதிபாலன் இன்று உத்தரவிட்டார்.

இந்தியாவின் புதுக்கோட்டை, ஜனதாப்பட்டிணம் மற்றும் கோட்டைப்பட்டிணம் பகுதிகளிலிருந்து 8 படகுகளில் வந்த 30 மீனவர்கள் யாழ். அனலைதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளையில், காங்கேசன்துறை கடற்படையினரால் இம்மாதம் 11ஆம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.

மறுநாள் (12) அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில்  விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். தொடர்ந்து மேற்படி வழக்கு இன்று (17) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிபதி மேற்படி 30 மீனவர்களையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இதேவேளை, இந்தியா புதுக்கோட்டை ஜனதாப்பட்டிணம் பகுதியிலிருந்து 5 படகுகளில் வந்த 20 மீனவர்கள் கடந்த மாதம் 20ஆம் திகதி காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது, நீதிமன்றம் இவர்களை விளக்கமறியலில் வைத்தது.

இந்நிலையில் மீண்டும் மேற்படி வழக்கு இன்று  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மேற்படி 20 மீனவர்களையும் மேலும் 14 நா
ட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment