Wednesday, December 11, 2013
இலங்கை::ஜெர்மனியில் நேற்று முன்தினம் நிறைவு
பெற்ற மக்கள் நம்பிக்கை தீர்ப்பாயத்தில் வன்னியில் இடம்பெற்ற போர்
தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்பட இயக்குனர் கெலும் மக்ரே
சாட்சியமளித்துள்ளார் என திவயின குறிப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர் மற்றும்
சிங்களவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மக்ரே சாட்சியமளித்துள்ளார்.
அரசசார்பற்ற நிறுவனங்களை சேர்ந்த 11 நீதிபதிகள் இந்த தீர்ப்பாயத்தின்
வழக்கு விசாரணைகளை நடத்தினர். இங்கு சாட்சியமளித்த மக்ரே மூன்று
இலங்கையர்கள் தமக்கு இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள்
தொடர்பில் தகவல்களையும் ஆதாரங்களையும் வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகள் அவருக்கு வழங்கிய தகவல்களை கொண்டே அவர்
இந்த சாட்சியங்களை வழங்கியிருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது என திவயின
கூறுகிறது. மேலும் புலிகள் வெளியிட்டு வந்த தேதுன்ன (வானவில்) என்ற சிங்கள
பத்திரிகையை வெளியிட்ட ரோஹித்த பாஷண அபேவர்தனவும் இதில்
சாட்சியமளித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:
Post a Comment