Wednesday, December 11, 2013

மணிப்பூரில் என்கவுன்டர்: 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

Wednesday, December 11, 2013
 இம்பால்::மணிப்பூர் மாநிலம் தவுபால் மாவட்டத்தில் இன்று அதிகாலை ‘நாங்பொக் கீத்தெல்மான்பீ’ என்ற பகுதியில் காவல்துறையை சேர்ந்த கமாண்டோ படையினரும், ராணுவத்தின் 21வது படையணியை சேர்ந்தவர்களும் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர்.

அப்போது குக்கி தேசிய முன்னணி இயக்கத்தை சார்ந்தவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டவர்கள் மீது திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதற்கு காவல்துறையினரும் எதிர்தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்குமிடையே நடந்த கடும் சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

மாவட்ட தலைநகரிலிருந்து மேலும் பல படையினர் தாக்குதல் நடைபெற்ற அப்பகுதிக்கு விரைந்துள்ளதாகவும் சண்டை தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment