Saturday, November 9, 2013

உச்சிமாநாட்டை பகிஷ்கரிப்பது தவறு: புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கொடூரங்களை நாம் எவரும் மன்னித்துவிடலாகாது: பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக்!

Saturday, November 09, 2013
லண்டன்::இலங்கையில் மாற்றமொன்று நிகழ வேண்டும் என்பதில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன். நீண்ட காலமாக புலிகளினால் புரியப்பட்ட கொடூர செயற்பாடுகள் இலங்கை அரச படைகளால் முடிவுக்கு கொண்டுவரப் பட்டுள்ளது.
 
எனவே புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கொடூரங்களை நாம் எவரும் மன்னித்துவிடலாகாது. எனினும் உச்சி மாநாட்டில் பங்குகொள்ளாது விடுவது தவறு.1948ம் ஆண்டில் இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் அந்நாட்டின் வடபகுதிக்கு விஜயம் செய்யும் முதலாவது பிரிட்டிஷ் பிரதம மந்திரியாக டேவிட் கெமரூன் இருப்பதுடன் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்துப் பேசுவார் என்றும் அவர் தெரிவித்தார்.
 
யுத்தம் நிறைவுக்கு வந்த 2009ம் ஆண்டு தொடக்கம் இலங்கை அரசாங்கம் இடம் பெயர்ந்த மக்களை மீள் குடியமர்த்துவதற்கும் உட்கட்டமைப்பு வசதிகளை மீள் நிர்மாணம் செய்வதற்கும் தரைக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கும் முன்னாள் புலிகளை. சமூகத்தில் ஒன்றிணைப்பதற்கும் ஆக்கப்பூர்வமான பாரிய பணிகளை புரிந்துள்ளது என குறிப்பிட்டார்.
 
எனவே இலங்கைக்கு விஜயம் செய்வதன் முலம் அங்குள்ள நிலைமைகளை நேரடியாக அவதானித்து உண்மை நிலையை புரிந்து கொள்ள முடியும் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் தெரிவித்தார்.

No comments:

Post a Comment