Sunday, November 10, 2013

காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது உறுதி!:-ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவுக்கு! பிரதமர் மன்மோகன்சிங் கடிதம்!



Sunday, November 10, 2013
புதுடெல்லி::இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டிற்கு, இந்தியாவில் இருந்து ஒரு துரும்பு கூட செல்லக்கூடாது' என்ற, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மிரட்டலை, காங்கிரஸ் கண்டு கொள்ளவில்லை. வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமயில், இரு அதிகாரிகள் கொண்ட குழு, இலங்கை செல்லும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், தமிழக கட்சிகளை திருப்தி படுத்தும் வகையில், பிரதமர் மன்மோகன் சிங் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என, தெரிகிறது.
புலிகள் ஆதரவு தமிழர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது உறுதியாகி விட்டது. இதில் வெளியுறவுத்துஅறை அமைச்சர் கலந்துகொள்கிறார் என தெரிகிறது.
 
இலங்கை தலைநகர் கொழும்பில் காமன்வெல்த் அமைப்பில் உள்ள 53 உறுப்பு நாடுகளில் இந்தியா முக்கிய அங்கம் வகிக்கும் நாடு என்பதால் கொழும்பு மாநாட்டில் மன்மோகன் சிங் பங்கேற்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை கூறியது. இதையடுத்து மன்மோகன் சிங்கும் கொழும்பு மாநாட்டிற்காக ஏற்பாடுகளை பிரதமர் அலுவலகம்  செய்து வந்தது. இந்த நிலையில் தமிழக மக்களின் மனவுணர்வுக்கு எதிராக செயல்படக் கூடாது. எனவே இலங்கை பயணத்தை மன்மோகன் சிங் புறக்கணிக்க வேண்டும் என்று மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம். ஜி.கே. வாசன், நாராயணசுவாமி, ஜெயந்தி நடராஜன் ஆகியோர் கூறினார்கள். இதையடுத்து மத்திய மந்திரிசபை கூடி இதைப்பற்றி விவாதித்தது. அதில் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. அதன் பிறகு நடந்த காங்கிரஸ் உயர்மட்ட குழு கூட்டத்திலும் காங்கிரஸ் மூத்த தலைவர்களால் ஒருமித்த கருத்துக்கு வரமுடியவில்லை.
 
இதனால் இலங்கைக்கு செல்வதா? வேண்டாமா? என்பதை பிரதமருக்கு குழப்பம் ஏற்பட்டது. இதற்கிடையே இலங்கைக்கு பிரதமர் செல்லக்கூடாது என்ற கோரிக்கை தமிழ்நாட்டில் வலுத்தது. கடந்த 3 நாட்களாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு புலிகள் ஆதரவு தமிழ் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. வரும் 12சும் தேதி முழு அடைப்பு நடத்தவும் தமிழ் அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. இதனால் பிரதமர் மன்மோகன்சிங் தன் முடிவை உடனடியாக வெளியிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. எனவே முடிவெடுப்பதற்காக நேற்று முன் தினம் காலை காங்கிரஸ் உயர்மட்டக்குழு மீண்டும் கூடி ஆலோசனை நடத்தியது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த அந்த கூடட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்க கூடாது என மத்திய மந்திரிகள் அந்தோணி, ப.சிதம்பரம் ஆகிய இருவரும் வலியுறுத்தினர்.
 
2 வது ஆலோசனை கூட்டத்திலும் முடிவு எட்டப்படாததால் மன்மோகன் சிங்கும் சோனியாவும் தனியாக 10 நிமிடம் பேசினார்கள். அதன்பிறகு பேசிய சோனியா இந்த விவகாரத்தில் பிரதமர் எடுக்கும் முடிவே இறுதியானது என்றார். இதனால் இந்த விவகாரத்தில் நேற்று முன்தினமும் சஸ்பென்ஸ் நீடித்தது. ஆனால் நேற்று காலைஇந்த விவகாரத்தில் தெளிவான முடிவு தெரியத்தொடங்கியது. பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைக்கு செல்லமாட்டார் டெல்லி வட்டார தகவல்கள் உறுதிப்படுத்தின. பிரதமரின் புறக்கணிப்பு அறிவிப்பை நேற்று பிற்பகல் மத்திய வெளியுறவுத்துறை அதிகாரபூர்வமாக வெளியிட்டது.
 
தமிழ் நாட்டின் பிரதான கட்சிகளுக்கான அதிமுகவும், திமுக வும் இலங்கைக்கு எதிராக இருப்பதால் பிரதமர் புறக்கணிக்கும் முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் திமுக தலைவர் கருணாநிதி நேற்று  முன் தினம் பேட்டியளிக்கும்போது பிரதமர் மனச்சாட்சிப்படி நடந்து கொள்ளவேண்டும் என கூறியது மன்மோகன் சிங்கை மிகவும் யோசிக்க வைத்துவிட்டதாக தெரிகிறது. இதற்கிடையே இலங்கையில் காமன் வெல்த் மாநாடு தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் பிரதமர் மன்மோகன் சிங் பெயர் இடம்பெறவில்லை. எனவே காமன்வெல்த் மாநாட்டின் மன்மோகன்சிங் கலந்துகொள்ள மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது.
 
கொழும்பு காமன் வெல்த் மாநாட்டில் துணை ஜனாதிபதி அன்சாரியும் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டிருந்தது. பிரதமர் புறக்கணிப்பதால் துணை ஜனாதிபதியும் இலங்கை செல்லமாட்டார் என்று கூறப்படுகிறது. என்றாலும் காமன் வெல்த் மாநாட்டை இந்தியா முழுமையாக புறக்கணிக்காது. பிரதமர் சார்பில் இந்திய குழுவுக்கு வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் தலைமை  தாங்கி செல்
வார் என்பது தெரிகிறது..
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவுக்கு! பிரதமர் மன்மோகன்சிங் கடிதம்!!
 
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ள மாட்டார் என டில்லி தகவல்கள வெளியாகியுள்ளன. இந்நிலையில் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சேவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment