Pages

Tuesday, November 5, 2013

இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது: கமலேஷ் சர்மா!

Tuesday, November 05, 2013
லண்டன்::சர்வதேச விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது என பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்றதாகக் குற்றம் சுமத்தப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென விடுக்கப்பட்ட கோரிக்கையை கமலேஷ் சர்மா நிராகரித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடைமுறைச் சாத்தியமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்த இலங்கையுடன் பொதுநலவாய நாடுகள் அமைப்புச் செயலகம் இணைந்து செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

தேசிய நல்லிணக்கம் தொடர்பிலான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இம்முறை அமர்வுகளிலும் கடந்த காலங்களைப் போன்றே அனைத்து தரப்பினரும் பங்கேற்பார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
 
அத்துடன், இலங்கைப் போரின் இறுதி நிகழ்வுகள் குறித்து ஒரு நம்பகத்தன்மை மிக்க சர்வதேச விசாரணை தேவை என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியிருப்பது யதார்த்தத்துக்கு பொருந்தாத ஒரு விசயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.அது குறித்து தமக்கு நிலைப்பாடு எதுவும் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார் கமலேஷ் சர்மா.

No comments:

Post a Comment