Pages

Tuesday, November 5, 2013

(புலி அதரவு மனநோயாளிகளின் முள்ளிவாய்க்கால் நினைவிடம் துவக்கம் : பாதுகாப்பு கோரி ஐகோர்ட்டில் வழக்கு!!

Tuesday, November 05, 2013
மதுரை::இலங்கை போரில் கொல்லப்பட்ட புலிகளின்  நினைவாக, தஞ்சாவூர் அருகே "முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்' துவக்க விழாவிற்கு, பாதுகாப்பு கோரி, தாக்கலான வழக்கில், அரசுத்தரப்பில் விபரம் பெற்று தெரிவிக்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

உலகத் தமிழர் பேரமைப்பு அமைப்பாளர் (புலிபினாமி) பழ. நெடுமாறன் தாக்கல் செய்த மனு: இலங்கையில் 2009 ல்,  கொல்லப்பட்ட (புலிகளின்)    நினைவாக, தஞ்சாவூர் மாவட்டம் விளார் கிராமத்தில், "முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்' என்ற பெயரில், சிற்பக்கலை பூங்கா அமைத்துள்ளோம். தனியார் பட்டா நிலத்தை விலைக்கு வாங்கி, பூங்கா நிறுவியுள்ளோம். ஊராட்சியின் முன் அனுமதியும் பெற்றுள்ளோம்.
பூங்கா திறப்புவிழா, நவ.,8 முதல் 10 வரை நடக்கிறது. தஞ்சாவூர் கலெக்டர் அனுமதி வழங்கியுள்ளார். போலீஸ் பாதுகாப்புடன் விழா நடத்த அனுமதி கோரி, தஞ்சாவூர் எஸ்.பி.,யிடம் 2 முறை மனு அளித்தோம்; பதில் இல்லை. பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி டி.ராஜா முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் விஜயன், வக்கீல் விஜயானந்த்: பாதுகாப்பு காரணங்களைக்கூறி, கடைசி நேரத்தில் விழாவிற்கு தடை விதிக்க வாய்ப்புள்ளது. காவல்துறை சட்டப்படி, தனியார் இடத்தில் விழா நடத்த தடை இல்லை. மனுதாரர் தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்தவரல்ல. இது, போரால் (கொல்லப்பட்ட புலிகளின்)  பாதிக்கப்பட்ட மக்களின் நினைவுச் சின்னம். இதன் திறப்பு விழாவிற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. 3 நாட்களில் கருத்தரங்கு, கலந்துரையாடல் நடக்கிறது.
 
உள்நாடு புலிகளின் ஆதரவாளர்கள் மற்றும் வெளிநாட்டின் புலிகளின் ஆதரவாளர்கள் பங்கேற்கின்றனர். போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும். கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன்,"" தமிழக அரசிடம் விபரம் பெற்று, தெரிவிக்க கால அவகாசம் தேவை,'' என்றார். நீதிபதி,"" அரசிடம் விபரம் பெற்று தெரிவிக்க வேண்டும். விசாரணையை  ( இன்று) ஒத்திவைக்கப்படுகிறது,'' என்றார்.

No comments:

Post a Comment