Monday, November 11, 2013

கனடா மற்றும் இந்தியாவுடன் இணைந்து பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை புறக்கணிக்கப்போவதில்லை: அவுஸ்திரேலியப் பிரதமர் டொனி அபோட்!

Monday, November 11, 2013
மெல்பேர்::கனடா மற்றும் இந்தியாவுடன் இணைந்து பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை புறக்கணிக்கப்போவதில்லை, என அவுஸ்திரேலியப் பிரதமர் டொனி அபோட் தெரிவித்துள்ளார்.
 
மனித உரிமைகள் தொடர்பில் வேறு நாடுகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டிய தேவை அவுஸ்திரேலியாவுக்கு இல்லை எனவும் AAP செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
நீண்ட காலமாக பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் பிரதான நாடு என்ற வகையில், மாநாட்டை புறக்கணிக்கும் தேவையில்லை என அவர் கூறியுள்ளார்.
 
அதனால் பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்கும் நாடுகளுடன் கைகோர்க்கும் தேவை தமக்கில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைப்பு என்ற ரீதியில் பொதுநலவாயத்திற்கு மரியாதை செலுத்துவதாக எப்போட் கூறியுள்ளார்.

பொதுநலவாய அமைப்பின் முக்கிய, மூத்த உறுப்பு நாடு என்ற அடிப்படையில் ஒதுங்கியிருக்க விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் சென்று மற்ற நாடுகளுக்கு விரிவுரை செய்யும் அவசியம் தமக்கில்லை என அவுஸ்திரேலிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையில் பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். 
இலங்கை மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த மாநாட்டின் ஊடாக சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழையும் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை தடுப்பது குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment