Pages

Friday, November 8, 2013

இலங்கையுடன் உறவு இல்லாவிட்டால் தமிழர் பிரச்னை பற்றி யாரிடம் பேசுவது: தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்!

Friday, November 08, 2013
சென்னை::தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் சத்தியமூர்த்திபவனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
 
இலங்கை காமென்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது குறித்து பாஜ தலைவர்கள் முரண்பட்ட கருத்துகளை தெரிவிக்கின்றனர். எது உண்மையான பதில் என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வது குறித்து மத்திய அரசின் உயர்மட்ட குழு கூட்டத்தில்தான் முடிவு எடுக்கப்படும். இலங்கை உறவு அற்றுப்போனால் இலங்கை தமிழர்கள், தமிழக மீனவர்கள் பிரச்னை பற்றி யாரிடம் போய் பேசுவது என்பது எங்களுடைய வாதம். உணர்வுபூர்வமாக சிந்திக்கிறவர்களுக்கு இது புரியும்.

இசைப்பிரியா கொலை விவ காரம் தொடர்பாக இந்திய அரசு இலங்கை அரசிடம் பேசியுள்ளது. இப்பிரச்னை தொடர்பாக பொன்.ராதாகிருஷ்ணன் பிரதமரை கொச்சைப்படுத்தி பேசியது கண்டிக்கதக்கது.

இலங்கை காமென்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்றால் காங்கிரஸ் வீழ்ச்சியடையும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். காங்கிரசை யாராலும் வீழ்த்த முடியாது. இலங்கை தமிழர் பிரச்னைக்கும், தேர்தலுக்கும், கட்சி அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை.
 

ஈரோட்டில், ராஜிவ் சிலை உடைக்கப்பட்டது கண்டனத்துக்குரியது. காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து, அகில இந்திய காங்கிரஸ் மேலிடம் முடிவு எடுக்கும். தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம், மக்களின் கருத்துக்கள், இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் அழைப்பு ஆகியவை, கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.
காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டால், காங்கிரஸ் அழிந்து போகும்' என, கருணாநிதி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியை யாராலும் அழிக்க முடியாது. இலங்கை பிரச்னைக்கும், கட்சி அரசியலுக்கும், தேர்தலுக்கும் சம்பந்தமில்லை. இவ்வாறு, ஞானதேசிகன் கூறியுள்ளார்.
 
 

No comments:

Post a Comment