Pages

Sunday, November 3, 2013

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில், இரண்டு நாடுகளதும் கடற்படையினர் பேச்சுவார்த்தை!

Sunday, November 03, 2013
இலங்கை::இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில், இரண்டு நாடுகளதும் கடற்படையினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இந்தியாவின் சுஹன்யா என்ற கப்பலில் வைத்து, சர்வதேச கடற்பரப்பில் இடம்பெற்ற சர்வதேச எல்லை பாதுகாப்பு சம்பந்தமான கலந்துரையாடலில் இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மீனவர்களும், இந்திய மீனவர்களும் தங்களின் எல்லைகளை மீறி மீன்பிடியில் ஈடுபடுகின்றமையை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் தீவிரமாக மேற்கொள்ள இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment