Pages

Monday, November 4, 2013

சனல் - 4 தொலைக்காட்சியின்; இசைப்பிரியா தொடர்பான காணொளியை காரணம்காட்டி பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணிக்கக்கூடாது: வாசுதேவ நாணயக்கார!

Monday, November 04, 2013
இலங்கை::சனல் - 4 தொலைக்காட்சியின்; இசைப்பிரியா தொடர்பான காணொளியை காரணம்காட்டி கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணிக்கக்கூடாது என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.    
 
தெற்காசிய நாடுகளுடன் ஒன்றித்துச் செயற்பட்டாலே இந்தியாவின் பலம் அதிகரிக்கும் என்பதை டில்லி புரிந்து கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இசைப்பிரியா தொடர்பான காணொளி உண்மையென நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைத்தே தீரும். இவ்விடயத்தில் அரசு ஒரு போதும் பின்நிற்காது என்றும் அவர் தெரிவித்தார். 
 
ஆனால், இக்காணொளி மூலம் பொதுநலவாய மாநாட்டுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என கூறமுடியும். அதிலும் இக்காணொளி  ஒன்றை மட்டுமே காரணம் காட்டி பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணிக்காது என்றும் எம்மால் உறுதியாகக் கூற முடியும்.    ஏனெனில் இந்தியா தென்னகத் தமிழர்களை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லையே. அவர்களின் கருத்துகளுக்கு மட்டும் செவிசாய்க்கக் கூடாது. உண்மையை முழுமையாக உணர்ந்து கொள்ளவேண்டும்.    எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment