Wednesday, November 06, 2013
இலங்கை::மன்னார் – சவுத்பார் கடற்பரப்பில் முச்சக்கர வண்டி ஒன்றில் இருந்து கேரள கஞ்சாவுடன் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை 11.30 அளவில் மன்னார் பொலிஸார் குறித்த முச்சக்கர வண்டியை சோதனை செய்த போது இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 40 கிலோ 400 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் மன்னாரைச் சேர்ந்தவ
சந்தேகநபர்கள் நாளை மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர். மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
ர்களாவர்.

மன்னாரில் பாடசாலை மாணவிக்கு ஆபாசப் படம் காண்பித்த ஆசிரியர் கைது!
பாடசாலை மாணவி ஒருவருக்கு கைத்தொலைபேசியில் உள்ள ஆபாசப்படங்களை காண்பித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விடத்தல் தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஆசிரியர் நேற்று மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது சந்தேகநபரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஆனந்தி கணகரட்னம் உத்தரவிட்டார்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவர் கடந்த மாதம் 28ஆம் திகதி தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்து வைத்திருந்த ஆபாச படங்களை, அப்பாடசாலையில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவி ஒருவருக்கு காண்பித்ததாக கூறி விடத்தல் தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் விடத்தல் தீவு பொலிஸார் குறித்த ஆசிரியரை நேற்று கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவரிடம் இருந்து மீட்கப்பட்ட கையடக்கத் தொலைபேசி மற்றும் மெமரி காட் ஆகியவற்றை மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பிரிவுக்கு அனுப்புமாறு உரிய தரப்பினரிடம் நீதவான் பணிப்புரை விடுத்துள்ளார்.

No comments:
Post a Comment