Pages

Thursday, November 7, 2013

2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியல் மேன்முறையீடுகளை பரிசீலிக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

Thursday, November 07, 2013
இலங்கை::2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியல் தொடர்பில் கிடைத்துள்ள மேன்முறையீடுகளை பரிசீலனை செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 
மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் மட்டத்தில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
 
இதன்போது, மேன்முறையீடுகள் தொடர்பில் கிடைத்துள்ள ஆட்சேபனைகள்  தொடர்பிலும் கவனத்திற்கொள்ளப்படவுள்ளது.
 
இந்தமாத இறுதிக்குள் அனைத்து மேன்முறையீடுகளையும் பரிசீலனை செய்யவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.
 
அதன்பின்னர் 2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியலை வெளியிட முடியுமெனவும் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment