Thursday, October 10, 2013
இலங்கை::சென்னை::சென்னையில் இலங்கை வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை ஆடை வர்த்தகரான மொஹமட் இம்டியாஸ் என்பவரே இவ்வாறு கடத்திச்செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் சடையப்பா வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் தனியாக இருந்த போது கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடத்தியவர்கள் இம்டியாசின் மனைவியிடம் ஒரு கோடி ரூபா கப்பம் கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் கப்பம் பெற்றுக் கொள்ளாது குறித்த நபர்கள் மாலையில் இம்டியாஸை விடுதலை செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
கடத்தல் தொடர்பில் தொலைபேசி அழைப்பு கிட்டியவுடன் இம்டியாஸின் மனைவி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
வாகனத்தில் அழைத்துச் சென்றவர்கள் தம்மைத் தாக்கியதாகவும் பணம் வழங்குமாறு மிரட்டியதாகவும் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பின்னர் விடுதலை செய்ததாகவும் இம்டியாஸ் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் இம்டியாஸின் வாக்கு மூலம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் இது குறித்து தெளிவான விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment