இலங்கை::வடமாகாண முதலமைச்சர் சீ.வீ விக்னேஸவரன் இரண்டு இரணப்பு செயலாளர்களை நியமித்துள்ளார். அந்த நியமனம் தொடர்பில் தமிழத் தேசிய கூட்டமைப்பின் அங்கத்து கட்சிகளிடையே முரண்பாடுகளும் சந்தேகங்களும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கொழும்பு இரத்மலானை இந்துக் கல்லூரி அதிபராக இருந்த மன்மதராஜா, மற்றும் அரசசார்ப்பற்ற நிறுவனங்களில் பணியாற்றியவரும் சிறிது காலம் சேந்து செயற்பட்டு பின்னர் விலகியவருமான நிமலன் காத்திகேயன் ஆகியோர் இரணப்பு செலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனம் தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகின்றது.
தமிழத் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் அலோசணைகள் இன்றி கூட்டமைப்பின் தலைமையும், மாகாணசபையின் தலமையும் செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ள கூட்டமைப்பு வட்டாரங்கள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்கும் வகையில் வடமாகாண சபை செயற்பட் வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.
இவ்வாறான முறையற்ற நியமனங்கள் அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்கும் நிலைமையை தோற்றுவித்துவிடும் என்றும் கூட்டமைப்பு வட்டாரங்கள் கூட்டிக்காட்டியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மாகாண சபையை கைப்பற்றியபின் மேற்கொள்ளப்படும் விடயங்கள் ஆரம்பத்திலேயே கடுமையான முரண்பாடுகளை தோற்றுவித்தால் எதிர்வரும் 5 வருடங்களை வட மாகாண சபை எவ்வாறு கடக்கப் போகிறது என்ற கேள்விகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:
Post a Comment