Pages

Thursday, October 10, 2013

இந்தியாவுக்கான பாகிஸ்தான் உயர் தூதராக சையத் இப்னெ அப்பாஸ் நியமனம்!

Thursday, October 10, 2013
இஸ்லாமாபாத்::இந்தியாவுக்கான பாகிஸ்தான் உயர் தூதராக சையத் இப்னெ அப்பாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய பாகிஸ்தான் உயர்தூதராக பொறுப்பு வகிக்கும் சல்மான் பஷீர் ஓய்வு காலத்திற்கு பின்னரும் அப்பொறுப்புகளை கவனித்து வருகிறார்.

இதனையடுத்து, புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் தூதரகத்தில் அரசியல் ஆலோசகராக பணியாற்றிய சையத் இப்னெ அப்பாஸ் இந்தியாவுக்கான புதிய உயர் தூதராக பாகிஸ்தான் அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல், அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் உயர் தூதராக ஜலீல் அப்பாஸ் ஜிலானி நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment