Wednesday, October 16, 2013

அண்மையில் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் தேர்தலில் தோல்வியடைந்தோர் சொத்து விபரங்களை சமர்ப்பிக்கவில்லை: தேர்தல்கள் செயலகம்!

Wednesday, October, 16, 2013
இலங்கை::அண்மையில் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர்களில் பலர் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை இதுவரையில் சமர்ப்பிக்கவில்லை என தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
 
உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டங்களுக்கு அமைய, அவர்கள் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்க வேண்டுமென மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு அவர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இதேவேளை, தேர்தலில் வெற்றிபெற்ற அனைவரும் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை தேர்தல்கள் செயலகத்துக்கு சமர்ப்பித்துள்ளதாக ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க கூறியுள்ளார்.

 

No comments:

Post a Comment