Pages

Monday, October 28, 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவால் பொதுநலவாய மாநாட்டுக்குப் பாதிப்பில்லை: அரசு அலட்டிக்கொள்ளாது: அமைச்சர் கெஹலிய!

Monday, October 28, 2013
இலங்கை::பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிக்கப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவானது மாநாட்டில் எவ்வித தாக்கங்களையும் ஏற்படுத்தாது. அதை நாம் வெற்றிகரமாக நடத்தி முடிப்போம்.” இவ்வாறு கூட்டமைப்பின் தீர்மானத்துக்கு நேற்றுப் பதிலடி வழங்கியுள்ளது இலங்கை அரசு.
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் கலந்துகொள்ளும் மாநாட்டைப் புறக்கணிப்பதற்கு நேற்று முன்தினம் யாழில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏகமனதாக முடிவெடுத்திருந்தது.
அத்துடன், தமிழினத்துக்கெதிரான அடக்குமுறைச் செயல்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியன குறித்து மாநாட்டில் பங்கேற்க வரும் அந்நாட்டு அரச தலைவர்களுக்கு ஆவணங்களைக் கையளிப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த முடிவு சம்பந்தமாக அரசின் நிலைப்பாடு என்னவென்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெலவிடம் “உதயன்’ வினவியது.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “கூட்டமைப்பின் முடிவு குறித்து அரசு அலட்டிக்கொள்ளாது” என்று குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:
நாட்டிற்குத் தீமை விளைவிக்கக்கூடிய செயல்களையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாகச் செய்து வருகின்றது. அவர்களின் கொள்கை என்னவென்பது அரசுக்குத் தெரியும். எனவே, இதுதொடர்பில் நாம் அலட்டிக்கொள்ளமாட்டோம். எதிர்பார்த்ததைப் போன்று மாநாட்டை சாதகமாக நடத்திமுடிப்போம்” என்றும் அமைச்சர் கூறினார்.
 
tamil matrimony_INNER_468x60.gif
 

No comments:

Post a Comment