Tuesday, October 22, 2013

ஜீ.எல்.பீரிஸ் மலேசியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்!


Tuesday, October 22, 2013
இலங்கை::வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மலேசியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
 
இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவதே வெளிவிவகார அமைச்சரின் இந்த விஜயத்தின் நோக்கமென அமைச்சின் பொதுத் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ரொட்னி பெரேரா தெரிவிக்கின்றார்.
 
இந்த விஜயத்தின்போது, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், மலேசியாவின் வெளிவிவகார அமைச்சருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
 
வர்த்தகம், சுற்றுலா ஊக்குவிப்பு, முதலீடு மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான உடன்படிக்கைகள் தொடர்பில் இந்த விஜயத்தின் போது கலந்துரையாடப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பொதுத் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ரொட்னி பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment