Pages

Saturday, October 19, 2013

கள்ளப்படகில் செல்ல முயற்சி : இலங்கை வாலிபர் சிக்கினார்!

Saturday, October 19, 2013
ராமேஸ்வரம்::விசா காலம் முடிந்து, ஓராண்டாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தமிழகத்தில் தங்கியிருந்தவர், தனுஷ்கோடியில் இருந்து கள்ளப்படகில் இலங்கை செல்ல முயன்ற
போது, போலீசாரிடம் சிக்கினார்.
 
இலங்கை மட்டகளப்பு காத்தான்குடியை சேர்ந்தவர் சுதாகரன், 33. இவர், 27.3.12ல் சுற்றுலா விசாவில், சென்னை வந்தார். 22.9.12 உடன் விசா முடிந்தது. இலங்கைக்கு திரும்பி செல்லாமல் சென்னை, கோவை உள்ளிட்ட பகுதியில் தலைமறைவாக இருந்து, கூலி வேலை பார்த்து வந்தார்.
கள்ளப்படகில் இலங்கை செல்ல திட்டமிட்டு, நேற்று மாலை, தனுஷ்கோடி அருகே உள்ள முகுந்தராயர் சத்திரம் கடற்கரைக்கு வந்தார். தகவலறிந்த மண்டபம் கடலோர பாதுகாப்பு பிரிவு போலீசார், சுதாகரனை பிடித்து, விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment