Monday, October 7, 2013

இலங்கையில் சமாதானம் நிலவுவதையிட்டு நோர்வே அரசு மகிழ்ச்சியடைவதாகவும் வடபகுதியில் அபிவிருத்திப் பணிகளுக்கான உதவிகள் நோர்வே நாட்டினால் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்படும் நோர்வே நாட்டின் தூதுவர் கிரிட் லொசெர்ன்!

Monday, October, 07 ,2013
இலங்கை::இலங்கையில் சமாதானம் நிலவுவதையிட்டு நோர்வே அரசு மகிழ்ச்சியடைவதாகவும் வடபகுதியில் அபிவிருத்திப் பணிகளுக்கான உதவிகள் நோர்வே நாட்டினால் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்படும் எனவும் நோர்வே நாட்டின் தூதுவர் கிரிட் லொசெர்ன் தெரிவித்தார்.
 
அவர் அண்மையில் நீர்ப்பாசனம் மற்றும் நீர்வழங்கள் முகாமைத்துவ அமைச்சர் நிமால் சிரிபால டி சில்வாவை சந்தித்தபோது இது தொடர்பாக கலந்தாலோசித்தார்
 
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைத் தேர்தல் வெற்றியை தொடர்ந்து அங்கு இடம்பெறும் அபிவிருத்திச் செயன்முறைகளைப் பற்றி அவர் விசாரித்தார்.
 
அமைச்சர் டி சில்வா அவருக்கு விளக்கமளிக்கையில் வட மாகாண சபையானது நாட்டின் ஏனைய மாகாணங்கள் போன்றே எவ்வித வேறுபாடுமின்றி சமமாக கருதப்பட்டு செயற்படும் அதேவேளை அபிவிருத்திப்பணிகளும் முன்னெடுத்துச் செல்லப்படும் எனத் தெரித்தார்.
 
வட மாகாணத்தில் சுதந்திரமான தேர்தல் ஒன்று இடம்பெற்றதை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொண்டதாக குறிப்பிட்ட அமைச்சர் தமிழ்தேசியக்கூட்டணி அரசுடன் சேர்ந்து செயற்படவேண்டியதன் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டார்.
 
மேலும் வடக்கின் அபிவிருத்திப் பணிகளுக்கு நோர்வே அரசின் உதவிகளை தொடர்ந்தும் வழங்கும் படி அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment