Monday, October, 07 ,2013
இலங்கை::வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன்; ஜனாதிபதியின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொள்ள எடுக்கப்பட்ட முடிவு, நல்லிணக்கத்தை கொண்டு வருவதற்கான சரியான வழி என்று தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்
இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் நாட்டின் தலைவரின் முன்னால் விக்னேஸ்வரன் பதவிப்பிரமாணம் செய்துக்கொள்வதன் மூலம், தம்மை தெரிவு செய்த மக்களுக்கான சேவைகளை மேற்கொள்ளமுடியும் என்று சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்
அத்துடன் மத்திய அரசாங்கத்துக்கும் மாகாண அரசாங்கத்துக்கும் இடையில் நல்லுறவை பேண முடியும் என்றும் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்
இதற்கிடையில் சி வி விக்னேஸ்வரன் ஜனாதிபதியின் முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துக்கொள்வதன் மூலம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தனிநாட்டுக்கு ஒப்பான தேர்தல் விஞ்ஞானத்தில் மாற்றம் ஏற்படப்போவதில்லை என்று தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது
முன்னணியின் தேசிய அமைப்பாளர் மொஹமட் முஸம்மில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment