Pages

Saturday, October 19, 2013

வட மாகா­ணத்தில் இருந்து இரா­ணு­வத்­தி­னரை வெளி­யேற்றும் அதி­காரம் சர்­வ­தே­சத்திற்கு இல்லை. எமது நாட்டில் பாது­காப்­பினை பலப்­ப­டுத்தும் அதி­காரம் மத்­திய அர­சாங்­கத்­தி­டமே உள்­ளது: ருவான் வணி­க­சூ­ரிய!

Saturday, October 19, 2013
இலங்கை::வட மாகா­ணத்தில் இருந்து இரா­ணு­வத்­தி­னரை வெளி­யேற்றும் அதி­காரம் சர்­வ­தே­சத்திற்கு இல்லை. எமது நாட்டில் பாது­காப்­பினை பலப்­ப­டுத்தும் அதி­காரம் மத்­திய அர­சாங்­கத்­தி­டமே உள்­ளது என இராணுவப் பேச்­சாளர் பிரி­கே­டியர் ருவான் வணி­க­சூ­ரிய தெரி­வித்­துள்ளார்.

வடக்கு, கிழக்கில் பெண்கள் பாதிக்­கப்­ப­டு­வது தொடர்பில் இரா­ணு­வம் பொறுப்புக் கூற ­மு­டி­யாது. எமது கடமை மக்­களை பாது­காப்­பதே தவிர சீர­ழிப்­ப­தல்ல எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

வடக்கில் இருக்கும் இரா­ணு­வத்­தி­னரை வெளி­யேற்­று­வதில் சில அமைப்­பு­களும் வடக்கின் கட்­சி­களும் சர்­வ­தேச அமைப்­பு­களும் மும்­மு­ர­மாக செயற்­ப­டு­கின்­றன. இலங்­கையில் இன்று அமை­தி­யா­ன­தொரு சூழ­லினை ஏற்­ப­டுத்­தி­யதில் இலங்கை இரா­ணு­வத்­தி­னரே முக்­கிய பங்கு வகிக்­கின்­றனர். இவை இலங்­கை­யர்­க­ளுக்கு மட்­டுமே தெரியும்.

வடக்கில் இரா­ணுவக் குற்­றங்கள் நடந்­த­தாகக் கூறியே இன்று எமது நாட்டின் மீது மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­து­கின்­றனர்.
ஆனால், வடக்கில் பொது­மக்­களின் இழப்­பு­களை விடவும் அதி­க­மாக எமது இரா­ணுவ வீரர்­களே பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

இவை தொடர்பில் எந்த அமைப்­பு­களோ அல்­லது சர்­வ­தேச மனித உரிமை ஆணைக்­கு­ழுவோ பேசத் தயா­ராக இல்லை. மேலும், வடக்­கிலும் கிழக்­கிலும் கடந்த 4 ஆண்­டு­களில் 374 குற்­றச்­சாட்­டுகள், பெண்கள் துஷ்­பி­ர­யோகம் தொடர்பில் பதி­யப்­பட்­டுள்­ளன.

இவற்றில் 11 குற்றச்சாட்­டுகள் மட்டும் இரா­ணு­வத்­தினர் மீது சுமத்தப்பட்­டுள்­ளன. இந்த 11 முறை­ப்பா­டு­களும் சிங்­களப் பெண்­க­ளி­னா­லேயே முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. இவ்­வா­றான சூழ்­நி­லையில் வடக்­கிலும் கிழக்­கிலும் பெண்கள் இரா­ணு­வத்­தி­னரால் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர் என முன்வைக்கப்­பட்­டி­ருக்கும் குற்­றச்­சாட்­டு­களை ஏற்றுக் கொள்­ள­மு­டி­யாது.

வடக்கு, கிழக்கில் தமிழ்ப் பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படும் சம்பவங்களுடன் இராணுவத்தினரும் தொடர்புபட்டுள்ளதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை இராணுவம் மறுத்துள்ளது.

வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ்ப் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்துவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதில் இராணுவத்தினர் தொடர்புபட்டுள்ளதாக அந்த செய்திகளில் குற்றஞ்சுமத்தப்பட்டிருந்தது.

எனினும் இக் குற்றச்சாட்டுக்களை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய மறுத்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள விசேட அறிக்கை மூலமாக இராணுவப் பேச்சாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

எனினும் வடக்கு, கிழக்கில் பெண்கள் மீதான துஷ்பிரயோக சம்பவங்கள் குறித்து முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவற்றிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

No comments:

Post a Comment