Pages

Monday, October 7, 2013

இலங்கை வடக்கு மாகாணா முதல்வராக சி.வி. விக்னேஸ்வரன் கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையில் பதவியேற்றார்!!

Monday, October, 07 ,2013
இலங்கை::இலங்கை வடக்கு மாகாண தேர்தர்தலில் தமிழ் தேசிய கூட்மைப்பு மொத்தமுள்ள 38 தொகுதிகளில் 30 தொகுதிகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றது. இதையடுத்து வடக்கு மாகாண முதல்வராக  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சி.வி. விக்னேஸ்வரன் இன்று பதவியேற்றார்.
 
கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற இந்த பதவி ஏற்பு விழாவில் அதிபர் ராஜபக்சே அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

வடமாகாண முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் சி வி விக்னேஸ்வரன் இன்று முற்பகல் சத்தியபிரமாணம் செய்துக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் முன்னிலையில் இந்த சத்தியபிரமாண நிகழ்வு இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, எதிர்வரும் 11 ஆம் திகதியன்று வடமாகாண அமைச்சரவை யாழ்ப்பாணத்தில் வைத்து சத்தியபிரமாணம் செய்துக்கொள்ளும் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அறிவித்துள்ளது

இதற்கமைய எதிர்வரும் 9 ஆம் திகதியளவில் வடமாகாண அமைச்சர்கள் பெயரிடப்படுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 

அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் முன்னிலையில் இந்த சத்தியபிரமாண நிகழ்வு இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர். சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச். சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டமைப்பின் ஏனைய கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், அவர்களில் எவரும் இந்த சத்தியபிரமாண நிகழ்வில் பங்கேற்கவில்லை.

இதில், ஏற்கனவே தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா இந்தியாவிற்கு சென்றுள்ளார்.

அதேநேரம், இன்றைய சத்திய பிரமாண நிகழ்விற்காக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரிக்கு அழைப்பு விடுவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வின் போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, டியூ குணசேகர, திஸ்ச வித்தாரண உட்பட்ட ஆளும்கட்சியின் அமைச்சர்களும் பங்கேற்றனர்.
 
கடந்த மாதம்  21 ஆம் திகதி நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் 30 ஆசனங்களைக் கைப்பற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியை தன்வசப்படுத்தியது.
 
இந்தத் தேர்தலில் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக யாழ் மாவட்டத்தில்  போட்டியிட்ட முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியிருந்தார்.
 
இதற்கமைய வட மாகாண சபையின் முதலாவது முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் இன்று பதவியேற்றுள்ளார்.

என்னுடைய பதவியின் செயல்பண்புகளையும் கடப்பாடுகளையும் நான் நேர்மையுடனும் நம்பிக்கையுடனும் இயற்றுவேன் என்றுதான் இன்று காலை பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டேன். சி.வி. விக்னேஸ்வரன்
 
என்னுடைய பதவி வடமாகாண மக்கள் எனக்களித்த பதவி. தூரநோக்கின் அடிப்படையிலும் கிட்டியநோக்கின் அடிப்படையிலும் கடமையாற்றும்படி அவர்கள் எனக்கு ஆணை வழங்கியுள்ளார்கள். தூரநோக்கு எமது தனித்துவத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. அதனை அடைய நாம் எமது கடந்த காலப் போராட்டங்கள், அரசியல் அணுகுமுறைகள், அனுபவங்கள் யாவற்றிலிருந்தும் பாடங்களைக் கற்றே முன்னேற வேண்டி உள்ளது.
 
இது சம்பந்தமாக இனங்களுக்கிடையே எழுந்துள்ள சந்தேகங்களை அகற்றுவது காலத்தின் தேவையாக அமைந்துள்ளது. அதன் ஒரு அலகாகவே நாட்டின் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யத் தீர்மானித்தோம். எமது செயற்பாடு ஐக்கிய இலங்கைக்குள்ளேயே நாம் அரசியல் தீர்வொன்றை எதிர்பார்க்கின்றோம் என்ற எமது மனோநிலையை எடுத்துக் காட்டக்கூடியதாய் அமைந்துள்ளது. 
 
சிங்களமொழியும் பாரம்பரியங்களும் சிங்கள மக்களுக்கு எந்த அளவு முக்கியமோ அதே அளவு எமது மொழியும் எமது பாரம்பரியங்களும் எமக்கும் முக்கியம் என்பதை சிங்கள மக்கள் உணர்ந்து செயலாற்றவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். இங்கு வன்முறைக்கு இடமில்லை. வலோத்காரத்திற்கு இடமில்லை. புரிந்துணர்வு ஒன்றே எம்மை சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் நோக்கிச் செல்ல வழிவகுக்கும். எனவே என்னுடைய இன்றைய செயற்பாடு இரு இன பொது மக்களையும் ஒன்றுபடுத்த உறுதுணையாக அமைவதாக! இறைவன் ஆசி சகலருக்கும் கிடைப்பதாக!

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணசபை.

No comments:

Post a Comment