Sunday, October 27, 2013

புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைக்க்பபட வேண்டுமென கோரும் முன்னாள் புலி உறுப்பினர்கள்/புலிகளின் ஆதரவாளர்கள் கைது செய்யப்படுவர்: பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ எச்சரிக்கை!

Sunday, October 27, 2013
இலங்கை::புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைக்க்பபட வேண்டுமென கோரும் முன்னாள்  புலி உறுப்பினர்கள்/புலிகளின் ஆதரவாளர்கள் கைது செய்யப்படுவர் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய  ராஜபக்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புலிகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தடை செய்யப்பட்ட ஓர் பயங்கரவாத இயக்கமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, புலிகளின் உயிரிழந்த போராளிகளுக்காக நினைவுத்தூபிகளை அமைப்பது சட்டத்திற்குப் புறம்பானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தொடர்பில் வட மாகாணசபைக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டிய அவசியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வட மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாணம் இலங்கையின் ஒரு பகுதி எனவும், முக்கிய தீர்மானங்களை எடுக்கும் போது அரசாங்கத்தின் அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியமானது எனவும் கோத்தாபய   ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இன்று வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சியிலேயே மாகாண சபை நிர்வாகம் உள்ளது, தொண்ணூறு சதவீதமான உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகமும் அவர்களது கைகளிலேயே உள்ளது. அதனை விட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தி அக்கட்சியில் உள்ளனர். இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் வடக்கை சிறப்பாக கட்டியெழுப்ப முடியும். ஆனால் அவர்கள் அதனைச் செய்வதாக இல்லை. இன்னமும் எதிரணியில் இருப்பவர்கள் போன்று விமர்சன மற்றும் விதண்டாவாத அரசியலையே மேற்கொண்டு வருகின்றனர் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்நிலையில் இவர்கள் ஒன்று சேர்ந்து மக்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விடுத்து புலிகளின் துயில் இல்லங்களைப் புனரமைக்கப் போவதாகக் கூறுவது வேடிக்கையான விடயம். அக்கட்சியின் தலைவர் சம்பந்தன் ஒரு மூத்த அரசியல்வாதி, அனுபவம் உள்ளவர். அவர் இத்தகைய செயற்பாடுகளுக்கு இடமளித்துவருவது ஏன் என்று புரியவில்லை.

கிடைத்த சந்தர்ப்பத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

No comments:

Post a Comment