Sunday, October 27, 2013
ராமநாதபுரம்::எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, 6 மாதங்களாக இலங்கை சிறையில் வாடும் தமிழக, புதுச்சேரி மீனவர்கள் 81 பேரை, நிபந்தனை இன்றி விடுவிக்க வேண்டும். அதேபோல், இந்தியாவில் உள்ள இலங்கை மீனவர்களை பிணைய தொகை இன்றி விடுவிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக கடலோர விசைப்படகு மீனவர் சங்க மாநில பொது செயலாளர் போஸ் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகபட்டினம், காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் 81 பேர், எல்லை தாண்டி மீன்பிடித்தாக, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 44 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். ஆறு மாதங்களாக இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை விடுவிக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு, நிவாரணம் வழங்க வேண்டும். சில மாதங்களுக்கு முன் படகு பழுதானதால், இலங்கை மீனவர்கள் இருவர், தனுஷ்கோடி கடற்கரையில் ஒதுங்கினர். இவர்களும் தமிழக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை ஜாமினில் விடுவிக்க, தலா 10 ஆயிரம் ரூபாய் பிணைய தொகையாக செலுத்த கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. இவர்களை நிபந்தனையின்றி விடுவித்தால், இலங்கை அரசும் தமிழக, புதுச்சேரி மீனவர்களை பாரபட்சமின்றி விடுதலை செய்யலாம். எனவே, மத்திய அரசு, உடனடி பேச்சு வார்த்தை நடத்தி, தமிழக மீனவர்களை விடுவிப்பதோடு, படகுகளையும் மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

No comments:
Post a Comment