Pages

Wednesday, October 16, 2013

தமிழ்தேசியக்கூட்டமைப்புக்குள் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை பிரிவினைவாத அரசியல் நோக்கத்தை வலுப்படுத்தும்:மொஹமட் முஸம்மில்!

Wednesday, October, 16, 2013
இலங்கை::தமிழ்தேசியக்கூட்டமைப்புக்குள் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை பிரிவினைவாத அரசியல் நோக்கத்தை வலுப்படுத்தும் என்று தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மொஹமட் முஸம்மில், இந்த கருத்தை கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது வெளியிட்டார்

தமிழ்தேசியக்கூட்டமைப்புக்குள் பிரச்சினை உள்ளதாக இன்று தென்னிலங்கைக்கு காட்டப்படுகிறது

எனினும் இது பிரிவினைவாதத்தை வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற முயற்சியே என்று முஸ்ம்மில் குறிப்பிட்டார்

தனித்தனியாக ஒவ்வொருவரும் சத்தியபிரமாணம் செய்துக்கொண்டதாக கூறப்படுகின்ற போதும் அனைவரினதும் நோக்கம் ஒன்றாகவே அமைந்துள்ளது என்றும் முஸம்மில் தெரிவித்தார்
 
புதிய ஈழத் திட்டம் படிமுறை படிமுறையாக முன்னோக்கிச் செல்வதாக மொஹமட் முஸாம்மில் தெரிவித்தார்

பிரிவினைவாத அதிகாரத்துடன் வடக்கு ஆட்சியை கைப்பற்றிய கூட்டமைப்பு ஈழக் கனவை நனவாக்கிக் கொள்ளவென செயற்படுகிறது.

அதன் இரண்டாம் கட்ட நடவடிக்கை தற்போது பிரிந்து இருக்கும் வடக்கு, கிழக்கை ஒன்றிணைப்பதாகும். இதனை வடக்கு முதல்வர் சிவி விக்னேஸ்வரன் அண்மையில் கூறியிருந்தார்.

உள்நாட்டில் சுயாட்சி வழங்கப்படாவிட்டால் சர்வதேச ஆதரவுடன் அதனைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

எனவே கூட்டமைப்பினர் தமது இலக்கை நோக்கி படிப்படியாக முன்னேறிச் செல்கின்றனர்.

இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸாம்மில் தெரிவித்தார். .
 
ஐக்கிய தேசியக் கட்சியையும் அதன் தலைவரையும் மக்கள் நிராகரித்துள்ளதாக ஜே.என்.பி.யின் பேச்சாளர் மொஹமட் முஸாம்மில் தெரிவித்துள்ளார்.
 
ஐக்கிய தேசியக் கட்சியை மக்கள் நிராகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
2005 மற்றும் 2010ம் ஆண்டுகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய இலங்கை என்ற கொள்கையை கடைபிடித்த காரணத்தினால் வெற்றியீட்டியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
ஐக்கிய தேசியக் கட்சி பிரிவினைவாத கொள்கைகளை பின்பற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
 
ஐக்கிய தேசியக் கட்சியினால் இனி ஆட்சியை கைப்பற்ற முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment