Sunday, October 20, 2013

இலங்கையும், அவுஸ்திரேலியாவும் அகதிகள் குறித்து பேச்சு!

Sunday, October 20, 2013
இலங்கை::இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா செல்லும் அகதிகள் தொடர்பில், இலங்கையும், அவுஸ்திரேலியாவும் கலந்துரையாடியுள்ளன.

தென்கொரியாவில் நடைபெறும் மாநாட்டில் கலந்துக் கொள்ள சென்றுள்ள அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ், அங்கு அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிசப்பை சந்தித்து பேசியுள்ளார்.

இதன் போது அகதிகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் எதிர்வரும் பொது நலவாய நாடுகளின் மாநாடு தொடர்பிலும் பேசப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
 

No comments:

Post a Comment