Sunday, October 20, 2013
இலங்கை::வடக்கு வாழ் தமிழ் மக்கள் விரும்பியோ விரும் பாமலோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குத் தமது வாக்குகளை வழங்கி அவர்களை ஆட்சி பீடமேற்றி அதிகாரத்தைக் கையளித்துள்ளனர். இந்த ஆட்சி யைக் கைப்பற்றுவதற்காக தமிழ்க் கூட்டமைப்பும் தமது இயலாமைக்கும் அப்பால் சென்று பொய்யான வாக்குறுதி களை வழங்கி மக்களைத் தம் பக்கம் கவர்ந்திழுத்து வாக்கு களை அபகரித்து வெற்றி பெற்றது.
இவ்வாறு அம்மக்கள் வழங்கிய ஆணையை தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் தலைவர்கள் சரிவரப் பயன்படுத்துகி றார்களா எனப் பார்த்தால் தேர்தல் நடைபெற்று இன்றுடன் சரியாக ஒரு மாதம் நிறைவடைகிறது. ஆனால் இதற்கு முன்னரே தமக்குள் பதவிகளுக்காக முட்டிமோதி முரண் பட்டு பல துருவங்களாகப் பிரிந்து செயற்படுவதைக் காண முடிகிறது. இது இவர்களை நம்பி வாக்களித்த மக்களுக்குப் பெரும் கவலையை அளித்துள்ளது. ஆளுமை கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையி லான அரசாங்கத்தின் அளவிட முடியாத பாரிய அபிவிருத் திப் பணிகளையும் கவனத்திற் கொள்ளாது இவர்களுக்குப் போய் வாக்களித்துவிட்டோமே என எண்ணிக் கவலைப்படும் அளவிற்கு வடக்கு மக்களின் மனநிலை உள்ளது.
அரசின் அபிவிருத்தியை உள்வாங்குங்கள், ஆனால் வாக் குகளை எமது ஒற்றுமையை உலகிற்குக் காட்ட எமக்கு வழங்குங்கள் எனக் கூறிய சிவாஜிலிங்கம், முப்பது பேரு டன் ஒற்றுமைப்பட முடியாது முள்ளிவாய்க்காலில் தனியா கச் சத்தியப் பிரமாணம் செய்துள்ளார். தமிழ்த் தேசியம், தமிழர் போராட்டம் எனத் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் பின்னால் நின்ற தமிழ் ஊடகங்கள் பல வும் பதவிக்காகப் போட்டியிட்டு ஒருவரையொருவர் காட் டிக் கொடுத்து தேசியத்தை விற்கும் விதத்தில் அறிக்கை விடும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்களைப் பார்த்து இவர்களுக்கா இதுவரை காலமும் பக்கம் பக்கமாகச் செய்திகளைக் கலர்ப் படங்களுடன் பிரசுரித்தோம் என வெளியே சொல்ல முடியாது குமுறுகின்றன,
இரத்தக் கண்ணீர் வடிக்கின்றன.
பிரபாகரன் இருந்த காலத்திலும் இதே தமிழ் ஊடகங்கள் தான் அவரைச் சர்வதேசம் கதைக்கும் அளவிற்கு மிகைப் படுத்தி உயர்த்தி வைத்தன. இறுதி யுத்தத்தின் இறுதி நாளி லும் அவரை ஹீரோவாகவே தமது ஊடகங்களில் வெளி யுலகிற்குக் காட்டி வந்தது. ஆனால் இறுதியில் என்ன நடந் தது என்பது அனைவருக்கும் தெரியும். இன்றும் அதே போன்றதொரு மிகைப்படுத்தலையே இத் தமிழ் ஊடகங் கள் தமிழ்க் கூட்டமைப்பினருக்கும் செய்து மூக்குடைபட்டு நிற்கின்றன. இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும், அதன் தலைவர்களினதும் உண்மையான சுயரூபத்தை அறிய மக்கள் அரச சார்பு சிறிதாக இருந்தாலும் செய்திகளில் பக்கச்சார் பற்ற விதத்தில் நடுநிலையாகச் செயற்படும் ஊடகங்களையே நாட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதுவே உண்மை. அரசாங்கத்தில் ஒரு சிறு சம்பவம் இடம்பெற்றாலும் அதனைப் பெரிதாக்கி தலைப்புச் செய்தியாக வெளியிடும் தமிழ் ஊடகங்கள் இன்று ஒருசிறு மாகாண சபை அமைச் சர் பதவிக்கே இத்தனை குடும்பிச் சண்டை போடும் தமிழ்க் கூட்டமைப்புத் தலைவர்களை இன்னமும் காப்பாற்ற முயல்கிறது.
உண்மைகளை மறைக்கின்றன. மக்களுக்குத் துரோகம் செய்கின்றன. பதவிகளுக்காக தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள் இவ்வாறு கீழிறங்கி தரம் தாழ்ந்து நடந்து கொள்வார்கள் எனத் தமிழ் மக்கள் இம்மியளவும் எதிர்பார்க்கவில்லை. தமது தமிழ்த் தலைவர்கள் இலங்கை அரசியலுக்கும், அர சியல்வாதிகளுக்கும் முன்னுதாரணமாகச் செயற்படுபவர்கள் என்றே தமிழ் மக்கள் நம்பியிருந்தார்கள். அந்த நம்பிக்கை யில் இத்தலைவர்கள் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டார் கள். அதனையே இத்தமிழ் மக்களால் தாங்கிக் கொள்ள முடியாமலுள்ளது. மாகாண சபை அமைச்சர் பதவி அவரது சகோதரனுக்கு வழங்கப்படவில்லை என்றும் சில இணைப்பாளர்கள் பதவி இவரது மைத்துனர் வழி மற்றும் தனது மனைவியின் வழி உறவுகளுக்கு வழங்கப்பட்டுவிட்டதாகவும் ஒருவரையொருவர் அரசியல் நாகரிகம் தெரியாது குற்றம் சாட்டி வசை பாடு வது வடக்கில் வாக்களித்த மக்களைப் பெரிதும் காயப்படுத் தியுள்ளது.
அதுவும் வாக்களித்த தமது விரல் மை மறைய முன்னர் இவர்கள் இவ்வாறு பதவிப்பித்து கொள்வதை அவ ர்களால் ஜீரணிக்க முடியவில்லை. ஆளும் அதிகாரத்தை இதற்காகவா பெற்றுக் கொடுத்தோம் என மக்கள் அங்க லாய்க்கின்றனர். ஒருவகையில் இது ஏதோவொன்றின் கைகளில் வழங்கப் பட்ட மாலையின் கதையாகவே உள்ளது. அதிகாரத்தை மட்டும் கைப்பற்றிவிட்டால் போதாது. ஆட்சி செய்யும் திற மையும், சக கட்சிகளின் பிரதிநிதிகளைத் தந்திரமாகக் கையாளும் திறமையும் தெரிந்திருக்க வேண்டும். இன்று கூட்டுக் கட்சிகளின் இரண்டாவது முக்கியமான கட்சியாகக் காணப்படும் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான கட்சி மூலமாகப் போட்டியிட்டு வெற்றிபெற்று
தேர்தலின் பின்னர் ஏற்பட்ட உள்வீட்டுச் சர்ச்சை காரணமாக அக்கட்சியிலிருந்து பதவி நீக்கப்பட்ட ஒருவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனை சுரேஸ் எம்.பி எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள மாட்டார். தனது சகோதரனுக்கு அமைச்சுப் பதவி வழங்கப் படவில்லை என்பதற்காக பதவிப்பிரமாண வைபவத்தையே புறக்கணித்தவர் அவர் என்று கூறப்படுகிறது. வெற்றி பெற்ற தனது கட்சி உறுப்பினர்களை மட்டுமல்லாது கூட்டமைப்பிலுள்ள ஏனைய மூன்று கட்சிகளையும் கூட்டுச் சேர்த்து பத வியேற்பு விழாவைப் பகிஷ்கரித்து தனது பலத்தைக் காட்டி யவர் சுரேஸ் எம்.பி என்பது உண்மை.இந்நிலையில் தனது கட்சி மூலம் போட்டியிட்டு பதவி கொடுக்க வேண்டாமெ னப் பட்டியலிட்ட ஒருவருக்கு தமிழ்க் கூட்டமைப்பு தலைமை வேண்டுமென்றே அமைச்சர் பதவி வழங்கியிருப்பது நிச்சயம் சுரேஸ் எம்.பியை சீண்டிப் பார்க்கும் ஒரு செயலே.
அதனால் அவரோ அவருடன் சேர்ந்து நிற்கும் ஏனைய கட்சி களோ நிச்சயம் இந்தப் புதிய அமைச்சருக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டார்கள். முடிந்தால் இடையூறாகவே இருப்பர். இந்தப் புதிய அமைச்சரின் பொறுப்பில் பொது மக்களுக்கு மிக அவசியமான ஆறு விடயங்களுக்கான அமைச்சுப் பொது மக்களுக்கு மிக அவசியமான ஆறு விடயங்களுக்கான அமைச்சுப் பத விகள் உள்ளமை அடுத்த விடயம். உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிரு ந்தே சுரேஸ் எம்.பி தனது கட்சியை கூட்டமைப்பின் வளர்ச்சிக்காகப் பயன் படுத்தி வருகிறார். அவர் போராட்ட காலத்தின் பிற்பகுதியில் தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத விடயங்களில் ஈடுபட்டிருந்தாலும், பின்னர் புலிகளுக்கு எதிராக காட்டிக் கொடுப்பு முயற்சிகளில் ஈடுபட்டிருந்தாலும், என்று தமிழ்க் கூட் டமைப்பு ஆரம்பிக்கப்பட்டதோ அன்றிலிருந்து தன்னை முற்றாகவே மாற்றிக் கொண்டார் என்று மக்கள் அவர் மீது ஓரளவு நம்பிக்கை கொண்டுள்ளனர்.
அத னாலேயே கூட்டமைப்பில் முக்கிய பதவியான பேச்சாளர் பதவி அவருக்கு வழ ங்கப்பட்டது. எனினும் கூட்டமைப்பிலுள்ள பிரதான கட்சியான தமிழரசுக் கட்சியானது ஆயு தப் போராட்டக் குழுவிலிந்து வந்த சுரேஸ் எம்.பி மற்றும், செல்வம் அடைக்கல நதன் ஆகியோரின் கட்சிகள் மீது ஒரு காழ்ப்புணர்வினை ஆரம்பம் முதலே கொண்டிருந்தது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. பல சந்தர்ப்பங்களில் இக்கட்சிகளை தமிழரசுக் கட்சி கழற்றிவிடப் பார்த்த போதிலும் தேர்தல்களில மக்கள் அங்கீகாரமளித்தமையால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதுவே நிஜமான உண்மை. அத்தகைய ஒருவரான சுரேஸ் எம்.பியின் கருத்தை தமிழ்க் கூட்டமைப்பின் தலைமை மறுதலித்தமை மிகப் பெரிய தவறு. அவரது கட்சியிலிருந்து யாரை அமைச்சராக நியமிப்பது என்பது அக்கட்சியின் தலைவரான அவராலேயே தீர் மானிக்கப்பட வேண்டும். அவர் தனது கட்சியின் தலைவர் மட்டுமல்ல கூட்டமை ப்பின் கூட்டுத் தலைவர்களிலும் ஒருவர். இதனை மறந்து தமிழ்க் கூட்டமைப்பு செயற்பட்டமையை சுரேஸ் எம்.பி தட்டிக் கேட்டமை நியாயமானதொன்று என்றே கூறலாம்.
அத்துடன் இவ்வறிவித்தல் தொடர்பாக சம்பந்தன் அவர்கள் கருத்துத் தெரிவித் திருந்தால் ஓரளவு நியாயம் இருந்திருக்கும். சுரேஸ் எம்.பியின் அணியினர் தெரி விப்பது போன்று நேற்று வந்தவர் எம்மை விமர்சனம் செய்ய நாம் அனுமதிக்க மாட்டோம் என்பதையும் நாம் கவனத்திற் கொள்ளவே வேண்டும். ஆனால் அதேவேளை நேற்று வந்தவரான அவர் ஒன்றும் சிறிய தரத்திலானவர் அல்ல. அவர் ஒரு உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர். மக்களால் மதிக்கப்படுபவர். ஆனால் அரசியலுக்கு அவர் புதிது என்பது ஒன்றே இவர்களது குற்றச்சாட்டிற்கு வலுச்சேர்க்கும் விடயமாகும். தகுதி அடிப்படையில் மாகாண அமைச்சரைத் தெரிவு செய்கிறோம் என முதலமைச்சர் தெரிவித்திருந்தாலும் அதற்கு கூட்டுக் கட்சியின் தலைமைகளுடன் நிச்சயம் அவர் ஆலோசித்திருக்க வேண்டும். ஏனெ னில் முதலமைச்சராகத் தெரிவாகியிருக்கும் இவர் கூட்டுக் கட்சிகளின் சிபார்சின் அடிப்படையிலேயே முதலமைச்சர் வேட்பாளராகத் தெரிவாகிப் போட்டியிட்டு வெற்றி பெற்று இன்று முதலமைச்சராகியிருக்கிறார். இந்நிலையில் இவர் சுரேஸ் எம்.பி மீது மட்டும் அறிக்கைகளாகத் தனது கோபத்தை காட்டுகிறார் என்றால் ஏதாவது முன்கோபம் இருக்க வேண்டும். அப்படியெதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
இவரை முதலமைச்சர் வேட்பாளராகத் தெரிவு செய்த போதும் சுரேஸ் எம்.பி அதற்குப் பெரிதாக எதிர்ப்புக் காட்ட வில்லை. ஒருவேளை தேர்தலில் தனது சகோதரன் அதிக விருப்பு வாக்குகளைப் பெறுவதற்காக மறைமுகமாக சுரேஸ் எம்.பி செயற்பட்டு அவ்விடயம் முதல மைச்சரின் செவிகளுக்கு எட்டி அதன் தொடராகவும் இது இருக்கலாம். எது எவ்வாறிருப்பினும் இன்று கூட்டமைப்பிற்குள் புதிய முதலமைச்சர் அவர் களினால் புதிதாகக் கொண்டுவரப்பட்டிருக்கும் தகுதி அடிப்படையில் பதவி தெரிவு எனப் புறப்பட்டால் உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள தொண் ணூறு வீதமான பாராளுமன்ற உறுப்பினர்கள், எண்பது சதவீதமான உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் தத்தமது பதவிகளில் இருக்க முடியாது. அத்துடன் இவ்வாறு அரசியலில் புதுயுகம் படைக்க முயல்பவர்கள் தாமும் அதனைப் பின்பற்றுவது அவசியம் என்பதையும் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
சுரேஸ் எம்.பி யைத் தமது சுட்டு விரலைக் காட்டிக் குற்றம் சுமத்துவோர் மூன்று விரல்கள் உங்களை நோக்கி அதே குற்றச்சாட்டிற்காக சிந்திக்குமாறு கேட் பதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும். தனது சகோதரனுக்காக அவர் சண் டையை ஏற்படுத்துகிறார், குழப்பத்தை உண்டு பண்ணுகிறார் என்றால் அவர் தெரிவித்திருக்கும் ஏனைய உறவுகளுக்கான பதவிகள் விடயம் பற்றியும் சம்பந் தப்பட்டவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்வீட்டு விவகாரங்கள் தொடர்பாக எமது பத்திரிகை சில செய்திகளை அவ்வப் போது பிரசுரித்து வந்த காலத்தில் அன்று எம்மைத் தவறாக விளங்கிக் கொண்ட ஒருசிலர் இன்று அதுவே உண்மை எனக் கூறுகின்றனர். அதற்கு இதுவரை கால மும் ஏனைய தமிழ் ஊடகங்களில் தமிழ்க் கூட்டமைப்பை மிகைப்படுத்திய செய்திகளே காரணமாக இருந்தது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் இந்து மத விவகார இணைப் பாளர் பிரம்மஸ்ரீ பாபுசர்மா இராமச்சந்திரக் குருக்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து ஆகியோர் தமி ழ்க் கூட்டமைப்பு தொடர்பாக தெரிவித்து வந்த கருத்துக்கள் இன்று உண்மை யாகியுள்ளன. அன்று இவை வெறுப்பாகத் தெரிந்த சிலர் இன்று அதனை ஆமோதிக்கின்றனர். அன்று இவர்கள் தீர்க்கதரிசனமாகத் தமது கருத்துக்களை முன்வைத்ததாகவும் அவற்றையே உங்கள் பத்திரிகை பிரசுரித்ததாகவும் இன்று தெரிவிக்கின்றனர். முன்னர் புலிகளையும், பின்னர் தமிழ்க் கூட்டமைப்பையும் தலையில் தூக்கி வைத்தாடி அவர்களுக்காக அரசாங்கத்தை எப்போதும் விமர்சித்து வந்த வெளி நாட்டு வானொலி ஒன்றுக்கு அடிக்கடி செவ்விகளைக் கொடுத்தும், உள்ளூர் வார ப்பத்திரிகை ஒன்றுக்கு அறிக்கைகளையும் இதுவரை காலமும் விட்டு வந்த வடக் கிலுள்ள மதிப்புக்குரிய மதகுரு ஒருவர் இன்று தமிழ்க் கூட்டமைப்பின் ஒற்றுமை க்காக வெளிப்படையாகவே குரல் கொடுக்கிறார். இதிலிருந்தே கூட்டமைப்பு தடம் மாறிப் பயணிக்கிறது என்பதைத் தெளிவாக உணர முடிகிறது. அவரா லேயே தமிழ்க் கூட்டமைப்பின் செயற்பாடுகள் விமர்சிக்கப்படுகின்றன. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் தமக்கு வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்துச் செயற்பட வேண்டும்.
அதேபோன்று தமிழ் ஊடகங்க ளும் உண்மைகளை மூடி மறைத்து மேவிச் செயற்படாது பிரச்சினைகளை வெளி ப்படுத்தி மக்கள் விருப்பிற்கு மதிப்பளிக்க வேண்டும். தமிழ்க் கூட்டமைப்பு இனி யாவது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதும், அவரது அரசாங்கத்தின் மீதும் நம் பிக்கை வைத்துச் செயற்பட முன்வர வேண்டும். பாராளுமன்றத் தெரிவுக் குழு மூலமாகவோ அல்லது அரசாங்கத்துடன் நேரடி யாக இதயசுத்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி எவ்வகையிலாயினும் ஒரு தீர்வி ற்கு வந்து மக்கள் மகிழ்வுடன் வாழ வழி சமைக்க வேண்டும். இல்லையேல் அர சியல் வாழ்விலிருந்து முற்றாக ஒதுங்கினால் அரசாங்கத்தின் ஆதரவுடன் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வழி பிறக்கும். யுத்தம் முடிவடைந்து கடந்த நான்கு வருடங்களாக வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் அரசாங்கத்தின் உதவிகளைப் பெற்று எந்தவிதமான குறைகளுமின்றிச் சிறப்பாகவே வாழ்ந்து வந்தனர். இப்போது வடக்கில் ஆட்சியை நீங்கள் கைப்பற்றியுள்ளமையால் அதிகாரங்கள் சில உங்கள் வசமாகியுள்ளன. அவற்றை மத்திய அரசாங்கத்துடன் இணைந்து சிற ப்பாகச் செய்ய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். முதலமைச்சர் அவர் களது பதிவியேற்பும், அதனைத் தொடர்ந்து வந்த சம்பந்தன் ஐயாவின் அறிக்கை யும் இதற்குப் பச்சைக் கொடி காட்டி நிற்பினும் தமிழ்க் கூட்டமைப்பிலுள்ள ஏனையோரையும் அரவணைத்துச் சென்றால் தமிழ் மக்கள் முழுமையான பல னைப் பெறுவார்கள்.

No comments:
Post a Comment