Monday, October, 07 ,2013
மெல்பேர்ண்::எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை புறக்கணிக்கப் போவதில்லை என அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை காரணிகளுக்காக இலங்கை அமர்வுகளை புறக்கணிக்கும் உத்தேசம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கனேடிய பிரதமர் அமர்வுகளை புறக்கணிப்பதாக அறிவத்து சில மணித்தியாலங்களில் அப்போட் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எபெக் என்னும் சர்வதேச தலைவர்கள் அமர்வில் பங்கேற்பதற்காக கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பரும், அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் தற்போது இந்தோனேஷியாவிற்கு விஜயம் செய்துள்ளது.
இருவரும் இந்தோனேஷியாவின் தீவு ஒன்றில் நடைபெற்று வரும் அமர்வுகளில் பங்கேற்றுள்ளனர்.
ஹார்பரின் தீர்மானம் பற்றி கருத்து வெளியிட முடியாது எனவும் அது அவரது சுயாதீன தீர்மானம் எனவும் அப்போட் தெரிவித்துள்ளார்.
அமர்வுகளில் பங்கேற்கப் போவதாகவும் ஆக்கபூர்வமான யோசனை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகள் அமைப்பு மிகவும் முக்கியமான ஓர் சர்வதேச அமைப்பு எனவும், பழைய நண்பர்களை கைவிடத் தயாரில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment