Monday, October, 07 ,2013
ராமேஸ்வரம்::ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 20 மீனவர்கள், கடந்த வாரம் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது, அவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது. அவர்களின் காவல் இன்றுடன் முடிவடைந்தது.
இதையடுத்து அவர்கள் கடற்படை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களின் காவலை அக்டோபர் 21-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கொழும்பு கடற்படை தளபதி வலியுறுத்தினார்.
இதனையடுத்து மீனவர்கள் 20 பேரும் இன்று பிற்பகல் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அவர்களை விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார். இதையடுத்து அவர்கள் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, விரைவில் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment