Pages

Friday, October 18, 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் (புலிகளின் ஆதரவு மன நோயாளி) சி.சிறீதரனை கொழும்பு வர விடமாட்டோம்: ரவணா பலய அமைப்பு எச்சரிக்கை!

Friday, October 18, 2013
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் (புலிகளின் ஆதரவு மன நோயாளி)சி.சிறீதரனை கொழும்பு வர விடமாட்டோம் என ரவணா பலய அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

யாழ்ப்பாண வாழ் சிங்கள மக்களை சிறீதரன் விரட்டினால், அவர் கொழும்பிற்கு வர அனுமதிக்க மாட்டோம். யாழ்ப்பாண மக்களை விரட்டி, கொழும்பு நாடாளுமன்றில் கடமையாற்ற அனுமதியளிக்க முடியாது.

வரலாற்றுக் காலம் முதல் சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துள்ளனர். அவ்வாறான சிங்கள மக்களை அங்கிருந்து விரட்டுவது மிகவும் விரும்பத்தகாத செயலாகும். சிங்கள மக்களை விரட்டி, வெட்கமின்றி கொழும்பு வர முயற்சிக்கின்றார் சிறீதரன்.

இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு குந்தகம் ஏற்படுத்த முயற்சிக்கும் அனைவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விக்கேனஸ்வரன் சமாதானத்தை விரும்பினால் இவ்வாறான கருத்து வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராவணா பலய அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment