Wednesday, October 16, 2013

வீடற்ற குடும்பத்திற்கு ‍இலங்கை கடற்படையால் புதிய வீடு கையளிப்பு!

Wednesday, October, 16, 2013
இலங்கை::முல்லிக்குளத்தைச் சேர்ந்த வீடற்ற குடும்பத்திற்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு அண்மையில் கடற்படையினரால் வழங்கிவைக்கப்பட்டது.
 
முல்லிக்குளத்தைச் சேர்ந்த திருமதி.கொலஸ்ட்டிகா சர்வாய் என்ற மூன்று குழந்தைகளின் தாயாரான விதவைப் பெண்ணுக்கே இவ் வீடு வடமேல் கடற்படைத் தளபதியால் வழங்கப்பட்டது.
 
கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சமூகநல சேவையினூடாக, மிகவும் வருந்தத்தக்க நிலமையின் தனது குடும்பத்துடன் வாழ்ந்துவரும் திருமதி.கொலஸ்ட்டிகா சர்வாயின் வேண்டுகோளுக்கு இணங்கவே அவ் வீடு நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
 
கடற்படையின் கட்டடப் பொறியியல் பிரிவினர் மிக குறுகிய காலத்தில் இவ் வீட்டை நிர்மாணித்து முடிந்தனர். இதற்கான நிதி கடற்படையின் சமூகநல சேவை நிதியத்தினூடாக வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment