Pages

Tuesday, October 22, 2013

ஒரு இலட்சத்தி 33 ஆயிரம் விருப்பு வாக்குகளை பெற்று முதலமைச்சராக தெரிவான எனக்கு: மாவை சேனாதிராஜா ஆலோசணைகள் வழங்க வேண்டிய அவசியம் இல்லை: விக்னேஸவரன்!

Tuesday, October 22, 2013
இலங்கை::கொழும்பில் நடைபெறவுள்ள முதலமைச்சர்  மாநாட்டில் கலந்துகொள்வது என வடமாகாண முதலமைச்சர் சீ.வீ விக்னேஸவரன் தீர்மானித்து உள்ளதாகவும் ஆனால் தமிழத் தேசிய கூட்டமைப்பின் பிரதித் தலைவர் மாவை சேனாதிராஜா அதற்கு முன் தமிழ்த் தேசியனக் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என எதிர்ப்பு வெளியிட்டு உள்ளதாகவும் கூட்டமைப்பின் அதி உயர் பீட மூவரணிக்கு நெருங்கிய முக்கியஸ்த்தர்  ஒருவர் தெரிவித்தார்.

முதலமைச்சர் மாநாட்டுக்கு செல்வதாக இருந்தால் அதற்கு முன்னர் பேச வேண்டிய விடயங்கள் தொடர்பாக தமிழத் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் அபிப்பராயங்கள் பெறப்பட வேண்டும் என மாவை சேனாதிராஜா கூறிய விடயங்களை விக்னேஸவரன் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அந்த முக்கியஸ்த்தர் தெரிவித்தார்.

ஒரு இலட்சத்தி 33 ஆயிரம் விருப்பு வாக்குகளை பெற்று முதலமைச்சராக தெரிவான எனக்கு ஆலோசணைகள் வழங்க வேண்டிய அவசியம் இல்லை' எனவும் விக்னேஸவரன் கூறியதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள்  கூறுகின்றன.

இது தொடர்பாக தமிழத்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகி கருத்து கூற விரும்பவில்லை எனவும் கூட்டமைப்பின் அதி உயர் பீட மூவரணிக்கு நெருங்கிய முக்கியஸ்த்தர்  ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment