Pages

Tuesday, September 17, 2013

இந்திய நலன்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு இலங்கையை பயன்படுத்த இடமளிக்கப் போவதில்லை: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ!

Tuesday, September 17, 2013
இலங்கை::இந்திய நலன்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு  இலங்கையை பயன்படுத்த இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
 
இலங்கையில் சீனப் பிரசன்னம் தொடர்பான இந்தியாவின் கவலை குறித்து எழுப்பப்பட்ட கேள்வியின் போதே அவர் இதனை கூறிப்பிட்டுள்ளார்.
 
வடமாகாண சபைத் தேர்தலுக்கு 4 நாட்கள் உள்ள நிலையில் இந்தியாவின் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் அவர் இதனை குறியுள்ளார்.
 
தமிழ் நாட்டிலிருந்து தற்போதும் வெளிவரும் பிரிவினைவாதம் தொடர்பான தகவல் குறித்து கவலை அடைவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
 
இலங்கை இந்திய உறவு சிறப்பாகவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையிலுள்ள மொத்த வர்த்தகங்கள் இந்தியர்களின் கட்டுபாட்டில் உள்ளதாக கூறிய ஜனாதிபதி நாட்டில் தற்போது 43 சர்வதேச நிறுவனங்கள் செயற்படுவதாக தெரிவித்தார்.
 
 

No comments:

Post a Comment