Pages

Tuesday, September 17, 2013

தேர்தல்கள் நடைபெறுவதற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் வன்முறைகள் மேலும் அதிகரிக்கக் கூடிய அபாயம்: கபே எச்சரிக்கை!

Tuesday, September 17, 2013
இலங்கை::தேர்தல் சட்டமீறல்களை மேற்கொண்ட மற்றும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட 129 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவி;த்துள்ளது.

அவற்றுள் அதிகமான முறைப்பாடுகள் மத்திய மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும், அவற்றின் எண்ணிக்கை 163 எனவும் காவல்துறையினர் தேர்தல் நடவடிக்கை பிரிவு குறிப்பிட்டுள்ளது.

தேர்தல்கள் நடைபெறுவதற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் வன்முறைகள் மேலும் அதிகரிக்கக் கூடிய அபாயம் இருப்பதாக கபே இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் அதிகம் இடம்பெற்று வருவதாக கபே இயக்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போலி இலக்க தகடுகள் அடங்கிய வாகனங்கள் மற்றும் பழுதுபார்த்த நிலைய இலக்கங்கள் கொண்ட வாகனங்களின் பாவனை அதிகரித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டில் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் ஆளும் மற்றும் எதிர்கட்சி வேட்பாளர்களின் வாகனங்கள் தாக்கப்பட்டதுடன், முறையற்ற வகையில் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக கெபே அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இதுதவிர, குருநாகலை மாவட்டத்திலும் அதிகளவில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

மாகாண சபைத் தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக இலங்கை வந்துள்ள தெற்காசிய தேர்தல் முகாமைத்துவ அமைப்பின் பிரதிநிதிகள் இன்று தமது கண்காணிப்பு செயற்பாடுகளை வடமாகாணத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

இந்தியா, பாக்கிஸ்தான், நேபாளம், பூட்டான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளின் தேர்தல்கள் கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment