Pages

Friday, June 14, 2013

ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் குமார் சங்கக்காரவின் நிதானமான சதம் மற்றும் நுவன் குலசேகரவின் அதிரடி!


Friday, June 14, 2013
லண்டன்::ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் குமார் சங்கக்காரவின் நிதானமான சதம் மற்றும் நுவன் குலசேகரவின் அதிரடி ஆட்டத்தின் மூலம் வெற்றிபெற்ற இலங்கை அணி அரையிறுதிவாய்ப்பை தக்க வைத்துள்ளது.
 
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 293 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இங்கிலாந்து அணிசார்பாக ஜொனதன் ட்ரொட் 76 ஓட்டங்களையும், ஜோ ரூட் 68 ஓட்டங்களையும், பெற்றுக்கொடுத்தனர்.
 
இலங்கை அணிசார்பாக பந்துவீச்சில் ரங்ஹன ஹேரத், லசித் மாலிங்க மற்றும் சமிந்த எரங்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
294 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 47.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 297 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.
 
நிதானமாக துடுப்பெடுத்தாடிய குமார் சங்கக்கார 134 ஓட்டங்களைப் பெற்றதுடன், அதிரடியாக துடுப்பெடுத்தாடிய நுவன் குலசேகர 38 பந்துகளில் 58 ஓட்டங்களைக் குவித்தார்.
 
இங்கிலாந்து அணிசார்பாக ஜேம்ஸ் அண்டர்சன் இரண்டு விக்கெட்டுகளையும், கிரஹம் சுவான் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ஒருநாள் போட்டியில் தனது 15 ஆவது சதத்தை பூர்த்தி செய்த குமார் சங்கக்கார போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவுசெய்யப்பட்டார்.

No comments:

Post a Comment