Pages

Sunday, June 16, 2013

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப் பிளவு கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 50 வீடுகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைத்தார்!

Sunday, June 16, 2013
இலங்கை::முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்பிளவு கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 50 வீடுகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று திறந்து வைத்தார்.

மீள்குடியேற்ற அமைச்சினால் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள 165 வீடுகளில் முதற்கட்டமக இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு அவை மக்களிடம் கையளிக்கப்பட்டன.

மீள்குடியேற்ற அமைச்சின் நிதியில் இரானுவத்தினரின் மனித வலு பங்களிப்புடன் இந்த வீடமைப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அதே இக்கிராமத்திற்கான மின்சார விநியோகத் திட்டமும் ஜனாதிபதி, மகிந்த ராஜபக்ச, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது...

தேர்தலின் போது வடக்கு மக்கள் சுதந்திரமாக தங்களின் தீர்மானங்களை மேற்கொள்ள முடியம் என்று ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று, இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நிலையான சமாதானத்தையும், பாதுகாப்பினையும் தக்கவைத்துக் கொள்வதே தற்போது நாட்டு மக்களின் அவசியமாக இருக்கிறது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் படி, வட மாகாண சபைக்கான தேர்தல்கள் செப்டம்பர் மாதம் அளவில் நடைபெறும்.

இதன் போது வடக்கு மக்கள் தாங்கள் விரும்பும் அரசியல்வாதிகளை தங்களின் பிரதிநிதிகளாக, சுதந்திரமாக தெரிவு செய்ய முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment