Pages

Sunday, June 16, 2013

19 வது திருத்தச் சட்டம் இவ் வாரத்துக்குள் சமர்ப்பிக்கப்படும் ; தினேஷ் குணவர்தன!

Sunday, June 16, 2013
இலங்கை::19 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை இவ்வாரத்துக்குள் அவசர சட்ட மூலமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் படுமென அரச கட்சி பிரதம கொறடா தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
19 ஆவது தீருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு ஒவ்வானதா என்பது குறித்து உயர்நீதிமன்றத்தின் கருத்தை பெறுவதற்கு உயர்நீதிமன்றத்தில் இப்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
19 ஆவது திருத்தச் சட்டமூலம் ஒன்றுக்கு மேற்பட்ட மாகாணங்களை இணைப்பதற்கு 13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள ஷரத்தை நீக்குவதற்காக கொண்டுவரப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இச்சட்ட மூலத்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார்.

இச்சட்டமூலத்தை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதை பின்போடுவதற்கு அரசு தீர்மானிக்கவில்லை என்றும் உயர்நீதிமன்றத்தின் கருத்தை பெறுவதற்கு கால அவகாசம் தேவை என்பதால் செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்க முடியாதிருப்பதாகவும் அவர் சொன்னார். மேலும் உயர் நீதிமன்றத்தின் கருத்து செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டால் புதன்கிழமை சட்டமூலம் நடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை 13 ஆவது திருத்தத்தின் பஐ மாகாண சபைக்குள்ள அதிகாரங்கள் குறித்து ஆராய நியமிக்கப்படவுள்ள தெரிவுக்குழுவில் ஜே.வி.பி. பங்குபற்றாது என ஜே.வி.பி.யின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் எம்.பி. நேற்று வீரகேசரி வாரவெளியீட்டுக்குத் தெரிவித்தார்.
13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாணசபை முறையை நாம் ஆரம்பத்திலிருந்து எதிர்த்து வந்துள்ளோம். இந்த நிலையில் உத்தேச நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்குபற்றுவதில் அர்த்தமில்லை என்பதே எமது நிலைப்பாடாகும்.

இருந்தும் ஏனைய மாகாண சபைகளிலும் தேர்தல் நடத்திவிட்டு வடமாகாணசபைத் தேர்தலை மாத்திரம் நடத்தாமல் இழுத்தடிப்பது அங்குவாழும் மக்களின் அபிலாஷைகளை மதிக்காததாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment