Sunday, June 16, 2013
இலங்கை::13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் செய்வதனை விரும்பவில்லை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. தற்போதைய அரசியல் சாசனத்தில் காணப்படும் 13ம் திருத்தச் சட்டத்தை அதேவாறு முன்னெடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.
உத்தேச திருத்தங்களை இன்னமும் பார்வையிடவில்லை என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி பேர்னாட் சவேஜ் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்திற்கு பதிலீடாக 19ம் திருத்தச்சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக அறிந்து கொண்டதாகவும், அதன் உள்ளடக்கங்கள் பற்றி போதிய தெளிவு கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடமாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:
Post a Comment