Wednesday, May 22, 2013
சென்னை::கடன் தொல்லையால், மனைவி, மகள், தாய் ஆகிய மூன்று பேரையும் கழுத்தறுத்து
கொன்று விட்டு, ரயில் முன் பாய்ந்து, இலங்கை தமிழர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட
சம்பவம், சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, பரங்கிமலை - பழவந்தாங்கல் இடையே, மின்சார ரயில் பாதையில், நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் தாம்பரம் சென்ற, ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டார். ரயில் ஓட்டுனர் கொடுத்த தகவலின் அடிப்படையில், தாம்பரம் ரயில்வே போலீசார் உடலை மீட்டு, அந்த நபரின் சட்டை பையில் இருந்த, மொபைல் போன் எண் மூலம், அவரது நண்பரிடம் விசாரித்தனர். விசாரணையில், ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டவர், சென்னை, ஆதம்பாக்கம், தில்லை கங்காநகர், 22வது தெருவில், வாடகை வீட்டில் வசித்து வந்த, இலங்கைத் தமிழரான சுந்தரேசன், 50, என்பது, தெரியவந்தது.
இதையடுத்து, அவரது வீட்டிற்கு ரயில்வே போலீசார் சென்றனர். அங்கு, வீட்டிற்குள் மூன்று பெண்கள், கத்தியால் குத்தப்பட்டு, கழுத்தறுக்கப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்த ரயில்வே போலீசார், ஆதம்பாக்கம் போலீசிற்கு தகவல் அளித்தனர்; போலீசாரும் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்தனர்.
ஆதம்பாக்கம் போலீசார் விசாரணையில், கொல்லப்பட்டவர்கள் சுந்தரேசனின் மனைவி, சித்ரா, 38, மகள் தாமிரா, 10, சுந்தரேசன் தாய் நல்லம்மாள், 71, என்பது தெரியவந்தது. போலீசார், நான்கு பேர் உடல்களையும் மீட்டு, குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
சுந்தரேசன் யார்?
இலங்கை தமிழரான சுந்தரேசன், 25 ஆண்டுகளுக்கு முன், சென்னை வந்துள்ளார். எட்டு கார்களை வைத்து, டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த சுந்தரேசன், தொடர் நஷ்டம் ஏற்பட்டதால், ஏழு கார்களை விற்பனை செய்துவிட்டார். இறுதியில், ஒரு காரை வைத்து, ஏர்போர்ட்டில் இருந்து, பயணிகளை ஏற்றி வந்தார். மேலும், இலங்கை, கனடா, ஆஸ்திரேலியாவில் இருந்து, எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கி, சென்னையில் விற்பதும், இங்குள்ள பொருட்களை அந்த நாடுகளுக்கு, ஏற்றுமதி செய்வது உள்ளிட்ட தொழில்களையும் செய்து வந்தார். அதில், அவருக்கு அதிக நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. நஷ்டத்தை சமாளிக்க, கந்து வட்டிக்கு கடன் பெற்றதாகவும், கடன் கொடுத்தவர்கள் சுந்தரேசனை அடிக்கடி சந்தித்து, பணத்தை திருப்பி கேட்டதாகவும் கூறப்படுகிறது.மனைவி, குழந்தை, தாயிடம் அதிக பாசமாக இருந்த சுந்தரேசன், கடந்த சில நாட்களாக விரக்தியடைந்த நிலையில் இருந்துள்ளார்.
நண்பர்களை தவிர நெருங்கிய உறவினர்கள் யாரும், அவருக்கு சென்னையில் இல்லை. தனக்குப் பின், மனைவி, குழந்தை, தாய் ஆகியோர், அனாதையாகி விடுவர் என நினைத்து, அவர்களை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்திருக்கிறார் என, போலீசார் கருதுகின்றனர்.
இது தவிர, மனைவி, குழந்தை மீது பாசம் கொண்ட, சுந்தரேசன் கொலை செய்திருக்க வாய்ப்பிருக்கிறதா, வேறு யாராவது கொலை செய்திருப்பார்களா என்ற கோணத்திலும், போலீசார் விசாரணை தொடர்கிறது.
காப்பாத்துங்க... காப்பாத்துங்க...!
சுந்தரேசன் வீட்டில் நடந்த சம்பவம் குறித்து, பக்கத்து வீட்டில் வசிக்கும் சண்முகம் கூறியதாவது: நேற்று முன்தினம், சுந்தரேசன் குடும்பத்துடன் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, வி.ஜி.பி., கோல்டன் பீச்சிற்கு, சென்று வந்தார். நேற்று, அதிகாலை 3:30 மணிக்கு, "காப்பாத்துங்க... காப்பாத்துங்க...' என, ஒரு குழந்தையின் சத்தம் கேட்டது போல் இருந்தது. வெளியே வந்து மொட்டைமாடி மற்றும் வீட்டை சுற்றி பார்த்தோம்; யாரும் இல்லை. பின், தூங்க சென்று விட்டோம். காலையில், போலீஸ் வந்த போது தான், சத்தம் போட்டது, சிறுமி தாமிரா என, தெரிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment